பயிர்களைத் தாக்கி மகசூலை பாதிக்கும், வேர் அழுகல், வேர் கரையான், வேர்ப்புழு நோய்கள் போன்றவற்றைத் தடுக்க பீஜாமிர்தம் (Bijamirtham) மிகவும் பயனுள்ள இயற்கை மருந்தாகும்.
இதனைத் தயாரிப்பது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
-
பசு மாட்டு சாணம் - 5 கிலோ
-
கோமியம் - 5 லிட்டர்
-
சுத்தமான சுண்ணாம்பு - 50 கிராம்
-
மண் - ஒரு கைப்பிடி அளவு
-
தண்ணீர் - 20 லிட்டர்
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விட வேண்டும். விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும், நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.
பயன்கள் (Benefits)
இவ்வாறு செய்வதால், பயிரில் வேர் அழுகல், வேர் கரையான் மற்றும் வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும். எனவே இந்த மருந்தைத் தயாரித்து விவசாயிகள் பயனடையலாம்.
மேலும் படிக்க...
கரியைக் காசாக்க நீங்க ரெடியா? 2 லட்சம் வரை சம்பாதிக்க டிப்ஸ்!
கிராமத்தைச் சேர்ந்தவராக நீங்கள்?-குறைந்த முதலீட்டில் வியாபாரம் செய்ய சூப்பர் டிப்ஸ்!