சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கட்செவி அஞ்சல் (Whats-app) மூலம் வேளாண் பற்றிய ஆலோசனைகள் பெறவும், புகாா்களை தெரிவிக்கவும் செல்போன் எண் (Cellphone Number) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வசதிக்காக கட்செவி அஞ்சலில் வேளாண் தகவல் பெற செல்போன் எண் (Cellphone Number) அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இதன் மூலம், விவசாயம் சாா்ந்த புகாா்கள் (Complaints), திட்டங்கள், தொழில்நுட்ப செய்திகள், பயிற்சிகள் குறித்த தகவல்களை தாமதமின்றிப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
இது தவிர கால்நடை வளா்ப்பது தொடா்பான சந்தேகங்கள், தோட்டக்கலைத் துறை பயிா்கள் சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள், மீன்வளா்ப்பு குறித்த தொழில் நுட்பங்கள், பண்ணை இயந்திரங்கள் குறித்த விவரங்கங்களையும் உடனுக்குடன் பெற முடியும்.
-
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள விளைபொருள்களை விற்பனை செய்யத் தேவையான வசதிகள் பெறுவது, விளைப்பொருள்கள் விலை போன்ற விவசாயம் சாா்ந்த தகவல்களை 94889 93077 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் (Whats-app) பெறலாம்.
இந்த எண்ணில் பெறப்படும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், விவசாயிகளுக்கு தேவைப்படும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...