ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக நீலகிரியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 18 முதல் 20 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்ய, உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவில் இருந்து 40 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 18 முதல் 20 மில்லியன் கிலோ தேயிலை தேங்கிக்கிடக்கிறது. ரஷ்யாவிற்கும், உக்ரைனிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சர்வதேச தேயிலை ஏலம் நிறுவனத்தின் தலைவரும்,தேயிலை விற்பனை ஆலோசகருமான என்.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். இதனால் தேயிலை ஆலை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 40 மில்லியன் கிலோ தேயிலை ரஷ்யாவிற்கும், இதே போன்று 15 மில்லியன் கிலோ உக்ரைனிற்கும் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இதில் 40 சதவீதம் வரை நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!