ஆடையில் ஆயிரம் ரகங்கள் இருந்தாலும், உடலுக்கு ஏற்ற ஆடை என்றால் அது பருத்திதான். ஆரோக்கியத்திற்கான ஆடை என்பதாலேயே பருத்தி ஒரு பணப்பயிர் ஆகும். உலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் பருத்தி, இந்தியாவில், மிக முக்கிய விவசாயப் பயிராகத் திகழ்கிறது.
பருத்தி பயிரிடும் முறை (Cultivation)
மண் (Sand)
பருத்தியைப் பயிரிட கரிசல் மண், வண்டல் மண், செம்மண் ஆகியவை ஏற்றவை.
பருவம் (Season)
குளிர்கால இறவை பயிராக ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திலும், கோடைகாலப் பயிராக பிப்ரவரி – மார்ச் மாதத்திலும், மானாவாரி பயிராக செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும் பயிரிடலாம்.
உரங்கள் (Fertilizers)
தொழு உரத்தையும், தழையுரத்தையும் பயன்படுத்தி நிலத்தை உழுது சமன்படுத்தவேண்டும். பின்பு 3 மீட்டர் இடைவெளிகளில் 3 செ.மீ ஆழத்திற்கு சிறு பாத்திகள் அமைத்து அதற்கு நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டியது அவசியம்.
பின்பு ஒவ்வொரு பாத்திகளிலும் 2 மீட்டர் இடைவெளிகளில் விதைகளை நன்றாக ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நீர் நிர்வாகம் (Water Management)
முதல் 30 நாட்கள் வரை 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. செடி முளைத்த பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. மாதத்திற்கு ஒருமுறைக் களைகளை நீக்கி தொழுவுரம் அல்லது தழைச்சத்து விடுவதினால் நல்ல சாகுபடியை பெறலாம்.
தழைசத்துக்கள் அதிகமாக இடும் பொழுது வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இதனால் நுனிகளை கிள்ளிவிடும் பொழுது பக்கக் கிளைகள் அதிகம் வளரும். பூக்களும்,காய்களும் அதிகம் காய்க்கும்.பருத்தி விதைத்து 90 நாட்களுக்கு பின்பு ஊடு பயிராக உளுந்து அல்லது தட்டைப்பயறைப் பயிரிடலாம்.
பருத்தியை தாக்கும் நோய்கள் (Disease)
ஆல்டர்னேரியா இலைப்புள்ளிநோய்
அறிகுறிகள் (Symptoms)
சிறிய ஒழுங்கற்ற உருவம் கொண்ட திட்டுக்கள் (இலைப்புள்ளி) தோன்றும். பாதிக்கப்பட்ட இலை காய்ந்து உதிரும். தண்டுகளில் மறு பிளவு தோன்றும்.
பாதுகாப்பு முறை (Protection)
வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.செடியின் காய்ந்த பாகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அடித் தண்டுகள் (அறுவடைக்குப் பின்பு) அகற்றப்பட வேண்டும்.
ஆன்தராக்நோஸ் (கொல்லடோடிரைக்கம்):
அறிகுறிகள் (Symptoms)
தண்டுகளில் ஏற்படும் புண்கள் மூலமாக நோய்க் கிருமிகள் செடிகளைத் தாக்கும். பூஞ்சான் பஞ்சு மற்றும் வித்துக்களில் ஊடுருவி விடும்இலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். பருத்திக் காய்கள் சிவப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.
தடுக்கும் முறைகள் (Protection)
வயல்களில் நீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.
பருத்தியின் மருத்துவப் பயன்கள் (Benefits)
-
பருத்தியின் இலையும் மொட்டும் மருத்துவ குணங்கள் கொண்டவை. இவற்றை அரைத்து பசும்பாலில் கரைத்து உட்கொண்டால் ரத்த நோய்கள் நீங்கும்.
-
பருத்தியின் விதைகளானப் பருத்தி கொட்டைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது.
பருத்திக்கு மாறிய விவசாயிகள்
நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்காச்சோள விவசாயிகள் சிலர், தற்போது பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழையின்மையால் மக்காச்சோள சாகுபடி ஏமாற்றம் அளித்த நிலையில், படைப்புழு தாக்குதல் காரணமாக மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் கன்னிவாடி, தருமத்துப்பட்டி, திப்பம்பட்டி, வீரக்கல் பகுதிகளில் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக நிலத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் படிக்க...
பயன்களை அள்ளித்தரும் திரவ உயிர் உரங்கள்- விவசாயிகள் கவனத்திற்கு!
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!