கொரோனா ஊரடங்கு காரணமாக, கொப்பரை ஏலம் ரத்துச் செய்யப்பட்டதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வைத்து பொருளீட்டுக்கடன் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது.
வாரந்தோறும் ஏலம் (Weekly auction)
கோவை மாவட்டம், ஆணைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
இதில், ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி தாலுகா பகுதி விவசாயிகள், தமிழகம் மற்றும் கேரள பகுதி வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு (Corona curvature)
இந்நிலையில், கொரோனாத் தொற்றுப்பரவலைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
கொப்பரை ஏலம் ரத்து (Copper auction canceled)
இதன் அடிப்படையில் தற்போது கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஊரடங்கால் பாக்கு உட்பட பலவகை விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
பொருளீட்டுக் கடன் (Material loan)
இந்நிலையில், விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து, பொருளீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது : மார்க்கெட்டில் கொப்பரைக்கான தேவையும் குறைந்து வருகிறது.
ரூ.3 லட்சம் கடன் (Rs 3 lakh loan)
தேங்காய் எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. தற்போதைய சூழலில், கொப்பரையை இருப்பு வைத்து, ரூ.3 லட்சம் வரை, விவசாயிகள் பொருளீட்டுக்கடன் பெற்றுக் கொள்ளலாம்.
இருப்பு வைக்கப்படும் பொருள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். கொப்பரை மட்டுமின்றி, பாக்கு உட்படப் பலவகை விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
விவசாயிகள் சிட்டா, வங்கி புத்தக நகல், ஆதார் எண் ஆகியவற்றைக் கொடுத்து, தங்கள் விளைபொருட்களை மிக எளிதாக இருப்பு வைக்கலாம்.ஊரடங்கு காலத்தில் பொருளீட்டுக்கடன் வசதியை விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!