டிஏபி உரத்திற்கான மானியத்தை மூட்டைக்கு 700 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டிஏபி உரம்
இந்தியாவில் யூரியாவுக்கு அடுத்தப்படியாக, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரம் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.500 மானியம் (Rs.500 grant)
கடந்த ஆண்டு டிஏபி மூட்டை ஒன்றின் விலை ரூ.1,700 ஆக இருந்தது. இதில் மத்திய அரசின் மானியமாக ரூ.500 வழங்கப்பட்டு வந்தது.
சர்வதேச அளவில் உயர்வு (Rise internationally)
இதையடுத்து உர நிறுவனங்கள் டிஏபி உர மூட்டை ரூ.1,200-க்கு விற்பனை செய்து வந்தன. இந்நிலையில், அந்த உரத்தின் விலை சர்வதேச அளவில் உயர்ந்து மூட்டை ஒன்றின் விலை ரூ.2,400 ஆக அதிகரித்தது.
மத்திய அரசு முடிவு (Federal Government decision)
இந்த விலை உயர்வு விவசாயிகளைப் பாதிக்காமல் இருப்பதற்கு ஏதுவாக அந்த உரத்துக்கு அளிக்கப்படும் மானியத்தை மூட்டைக்கு ரூ.100 உயர்த்த கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்தது.
மானியம் அதிகரிப்பு (Subsidy increase)
இதன்மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.500-ஐயும் சேர்த்து மொத்தம் ரூ.1,200 மானியம் அளிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய ரசாயனம், உரம், கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டலியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பழைய விலைக்கே (At the old price)
டிஏபி உர மானிய அதிகரிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அந்த உர மூட்டை ஒன்று ஏற்கெனவே உள்ள விலையான ரூ.1.200-க்கே விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும். மானியத்தை அதிகரித்துள்ளதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.14,775 கோடி செலவாகும்.
யூரியாவை பொருத்தவரை அதன் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் அதற்கான மானியத்தில் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு யூரியா மூட்டைக்கு ரூ.100 மானியம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆழ்கடல் திட்டம் (Deep Sea Project)
ஆழ்கடலில் உள்ள வளங்களைக் கண்டறியவும், அதை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், ஆழ்கடல் திட்டம் உருவாக்கப்பட உளளது.
இதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் கடலில் 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் படிக்க...
சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!
பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!
நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!