எல்லாக் காலத்திலும் மலிவான விலையில் கிடைக்கும் பழம் கொய்யா. விலை மலிவு என்பதால், இதன் மகத்துவத்தை மக்கள் தெரிந்துகொள்ள மறுக்கின்றனர் என்றே சொல்லலாம்.
கொய்யா சாகுபடி (Guava cultivation)
குறைந்த நீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யாவுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் கொய்யா சாகுபடி விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சாதகமான சூழல் (Favorable environment)
நல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடி செய்யப்படும் கொய்யா மிகுந்த சுவையுடன் இருக்கும்.கொய்யாவுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை.
கவாத்து அவசியம் (The parade is essential)
-
குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகளை உயரவிடாமல், ஆண்டுக்கு, 2 முறை கவாத்து செய்ய வேண்டும்.
-
நடவு செய்து, 5 மாதங்கள் கழித்துப் பூக்கத் தொடங்கும் போது பூக்களை உதிர்த்துவிட வேண்டும்.
இரட்டிப்பு மகசூல் (Double yield)
பூக்களை உதிர்ப்பதுடன், கவாத்தையும் முறையாகச் செய்தால்தான் மரங்கள் பருமனாக, தரத்துடன், பலமாக இருக்கும். இரட்டிப்பு அளவு மகசூல் கிடைக்கும்.
தேயிலைக் கொசுக்கள் (Tea mosquitoes)
குறிப்பாகக் கொய்யா தற்போது காய்ப்பு நடை பெற்று வருகிறது. கோடையில் கொய்யாப் பழங்களின் மேல் துளையிட்டு உள்ளிருக்கும் சாற்றை உறிஞ்சிவிடும்.
கருவாட்டுப் பொறி (Embryo)
இதனால் தோல் பகுதி கடினமாகி கருப்பு புள்ளிகள் ஏற்படும். இதைத் தவிர்க்க கருவாட்டுப் பொறி வைக்க வேண்டும்.
வேப்ப எண்ணெய் (Neem oil)
1லிட்டர் தண்ணீரில் 2மி.லி வேப்ப எண்ணெய் மருந்து கலந்து தெளிக்கலாம்.
கூடுதல் மகசூலுக்கு (For extra yield)
மகசூல் அதிகரிக்க ஒரு மரத்திற்கு 10கிராம் யூரியா 5கிராம் வீதம் சிங் சல்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்
போரான் சத்து குறைபாடு (Boron deficiency)
போரான் சத்து குறைந்தால் இலை சிறுத்துவிடும். காயில் வெடிப்பும் காணப்படும்.இதனால் விற்பனை பாதிக்கும்.இவற்றைத் தவிர்க்க 3கிராம் போராகஸ் ஓரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!