ரசயான உரத்திற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தில் பல்வேறு இயற்கை மருந்துகளைத் (Natural Fertilizers) தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். இந்த மருந்துகளில் உள்ள சத்துக்களைப் பற்றி பார்ப்போம்.
இயற்கை உரங்கள் (Natural Fertilizers)
தொழு உரத்தில் 1.24 %தழைச்சத்தும், 0.78 %மணிச்சத்தும், 2.08 %சாம்பல் சத்தும் உள்ளன.
ஆட்டு எருவில் 2.17 %தழைச்சத்தும், 1.10 % மணிச்சத்தும், 2% சாம்பல் சத்தும் இடம்பெற்றுள்ளன.கோழி எருவில் 5% தழைச்சத்தும், 2.88 % மணிச்சத்தும், 1.50 %சாம்பல் சத்தும் இருக்கின்றன. இதேபோல், பண்ணை எருவில் 1.25 % தழைச்சத்தும், 0.60 % மணிச்சத்தும் உள்ளன.
மீன் தூளில் 6.80 % தழைச்சத்தும், 7.10 விகித அளவு மணிச்சத்தும், 100 % சாம்பல் சத்தும் இடம்பெற்றுள்ளன. சணப்பில் 2.30 % தழைச்சத்தும், 0.50 % மணிச்சத்தும், 1.80 % சாம்பல் சத்தும் உள்ளன. தக்கைப்பூண்டில் 3.50 % தழைச்சத்தும்,, 0.60 % மணிச்சத்தும், 1.20 % சாம்பல் சத்தும் இருக்கின்றன.
சீமை அகத்தி
2.71% தழைச்சத்து
0.53 %வு மணிச்சத்து
2.20 %சாம்பல் சத்து
புங்கம் இலை
3.31 % தழைச்சத்து
0.44 % மணிச்சத்து
2.39 % சாம்பல் சத்து
கடலை புண்ணாக்கு
7.60 % தழைச்சத்து
1.50 % மணிச்சத்து
1.30 % சாம்பல் சத்து
வேப்பம் புண்ணாக்கு
4.90 % தழைச்சத்து
1.70 % மணிச்சத்து
140 % சாம்பல் சத்து
ஆமணக்கு புண்ணாக்கு
5.30 % தழைச்சத்து
140 % சாம்பல் சத்து
தேங்காய் புண்ணாக்கு
3.50 % தழைச்சத்து
2% அளவு சாம்பல் சத்து
எள்ளுப் புண்ணாக்கு
5.50 % தழைச்சத்து
1.75 % மணிச்சத்து
1.50 % சாம்பல் சத்து
பருத்தி புண்ணாக்கு
5.00 % தழைச்சத்து
1.75 % மணிச்சத்து
1.50 % சாம்பல் சத்து
ஒரு குண்டுசி முனையளவு மண்ணில் வாழும் லட்சக்கணக்கான நுண் உயிர்கள் செடிகளுக்கு அதிகளவில் நன்மை பயக்கின்றன என்பதை நாம் நினைவில் கொண்டு, இயற்கை மருந்துகளை பயன்படுத்த முன்வருவோம்.
மேலும் படிக்க...
ஆதார் எண் இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை!
PMKSY: பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!