தேவையில்லை எனத் துாக்கி எறியப்படும் சீமைக்கருவேல இலைச்சாறு, அலஞ்சி இலைச் சாறுகளை பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும் டானிக்காகப் (Tonic)பயன்படுத்தலாம்.
ஆயுர்வேதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரம், செடி, கொடிகளுக்கும் நன்மை தருகிறது. மண்ணின் தரத்தை மேம்படுத்த உரங்களுக்கு பதிலாக பயறு வகை குடும்பத்தைச் சேர்ந்தவற்றைக்கூட பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும்.
அதற்கு கொளிஞ்சி, சணப்பு, எருக்கு செடிகளை பயிரிட்டு மண்ணுடன் கலந்து உழவேண்டும்.
உழுவதற்கு முன் கிளரிசிடியா, வேம்பு, சவுண்டல், வாகை மரங்களின் இலைகளை துாவி 45 நாட்கள் கழித்து செடிகளை நடலாம்.
இதன்மூலம், இலைகள் மட்கி பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து அதிகரிக்கும். இதிலிருந்து வெளிவரும் கரிமச்சத்தின் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவு கிடைப்பதோடு மண்வளமும் அதிகரிக்கும்.
விளைச்சல் அதிகரிக்கும்
பாலை, மஞ்சணத்தி, கல்யாணமுருங்கை, சிசுமரம், அகத்தி, அலஞ்சி, வில்வ இலைகளின் சாற்றை பயிர்களின் மீது தெளித்தால் விளைச்சல் அதிகரிக்கும்.
இதன் மூலம் ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.
இவற்றைக் கையாள்வதன்மூலம் மண்ணுக்கும், மனிதனுக்கும் நஞ்சில்லாத உணவுகளை உற்பத்தி செய்து நீண்டகாலம் நலமுடன் நாமும் வாழலாம், மற்றவர்கள் வாழவும் துணை நிற்கலாம்.
தகவல்
சி.சுவாமிநாதன்
உழவியல் பேராசிரியர்
மதுரை விவசாய கல்லுாரி
மேலும் படிக்க...
சுயவேலைவாய்ப்பை உறுதி செய்யும் வேளாண் பட்டயப்படிப்புகள்- மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது!