1. தோட்டக்கலை

தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

விவசாயத்தின் சூட்சமங்களுள் ஒன்றே உரங்கள்தான். தகுந்த காலத்தில் தகுந்த பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தினால் மண் வளத்தை பாதுகாத்து, உற்பத்தியையும் பெருக்கிக்கொள்ள முடியும்.

அவ்வாறு இயற்கை விவசாயத்தில், காய்ப்புழு மற்றும் தண்டுப்புழுக்களை துவம்சம் செய்ய உதவுவது எதுவென்றால், அதுதான் அக்னி அஸ்திரம்.

தேவையான பொருட்கள் (Ingredients)

1. மாட்டுக்கோமியம்       - 20 கிலோ
2. புகையிலை                 - 1 கிலோ
3. பச்சைமிளகாய்            - 2 கிலோ
4. வெள்ளைப்பூண்டு        - 1 கிலோ
5.வேப்ப இலை                 - 5 கிலோ

தயாரிக்கும் முறை (Preparation)

முதல்படி (First Step)

50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண் பானையில் மாட்டுக்கோமியம் 20 லிட்டர், புகையிலை 1 கிலோ, பச்சைமிளகாய் 2 கிலோ, வெள்ளைப்பூண்டு 1 கிலோ, வேப்ப இலை 5 கிலோ என அனைத்தையும் சேர்த்து, சுமார் 1 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். அதாவது 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

இரண்டாம் படி (Second Step)

அதனை இறக்கி வைத்து, மண் பானையின் வாய்பகுதியில் துணியைக் கட்டிவிட்டு 2 நாட்கள் அதாவது 48 மணி நேரம் ஆற விட வேண்டும்.

நீரின் மீது ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கிவிட்டால், அதன் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

பின்பு வடிகட்டி வைத்துக்கொண்டு பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

குறிப்பு : மண்பானையைத் தவிர, வேறு பாத்திரத்தில் வைத்து கொதிக்க விட்டால், ரசாயன மாற்றம் ஏற்பட்டு, அக்னி அஸ்திரம் பலமிழக்கக்கூடும்.

பயன்படுத்தும் பயிர்கள் (Crops)

அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

பயன்படுத்தும் அளவு  (Quantity)

100 லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் என்ற விகிதத்தில் கலந்து,  பயிர்களுக்கு மாலை வேளையில் தெளிக்கலாம். இவ்வாறு தெளிப்பதால், காய்ப்புழு, தண்டுப்புழு உள்ளிட்டவை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

Credit : Maalaimalar

பயிர்கள் (Crops)

காய்ப்புழு மற்றும் தண்டுப்புழுத் தாக்கக்கூடிய அனைத்து பயிர்களுக்கும் இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தலாம்.

அக்னி அஸ்திரத்தின் பயன்கள் (Benefits)

1.இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த அக்னி அஸ்திரம் மிகச்சிறந்த பூச்சிகொல்லியாகப் பயன்படுகிறது.

2. நன்மை செய்யும் பூச்சிகள் வளரும்.

3. தீமை செய்யும் பூச்சிகளுக்கு ஒவ்வா தன்மையை உண்டாக்குவதால், அவை பயிர்களை தாக்காமல் வெளியே செல்லும்.

4. இரசாயன மருந்து தெளித்தால் நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து இறக்க நேரிடும்.

5. அதேநேரத்தில், இயற்கை மருந்து தெளித்தால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்காது.மகசூலும் அதிகமாக இருக்கும். நன்மை செய்யும் பூச்சிகள் சாகாது.

மேலும் படிக்க...

அறுவடைக்குப் பிந்தைய இழப்பைத் தவிர்க்க மானியம் - நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!

சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!

English Summary: Agni ashram that spreads stem worms - you know! Published on: 06 September 2020, 06:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.