விவசாயத்திற்கு முக்கிய சவாலாக இருக்கும் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க, கலப்பு பயிர் சாகுபடித் தவறாது கைகொடுக்கும் என கோவை வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பூச்சித் தாக்குதல் (Insect attack)
விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடியில் பெரும் பிரச்னையாக இருப்பதுப் பூச்சி தாக்குதலாகும். பூச்சிகளை கட்டுப்படுத்த, அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல், விளைபொருளின் தரம் பாதிக்கப்படுகிறது.
எனவே முக்கிப் பயிருடன், அதற்கேற்றக் கலப்பு மற்றும் ஊடு பயிர்களைச் சாகுபடி செய்வதால், பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும் என வேளாண் துறை ஆலோசனை கூறியுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வேளாண் அலுவலர் துளசிமணி கூறுகையில்,
தட்டைப்பயறு
விளைநிலத்தைச் சுற்றிலும் வரப்பு ஓரங்களில் தட்டைப்பயறு பயிரிட்டால், பொறிவண்டுகள் அந்த பயிரில் குடியேறும். அவை சாறு உறிஞ்சம் பூச்சிகளை அழித்து துவம்சம் பண்ணும்.
ஆமணக்கு (Castor)
நிலக்கடலை சாகுபடியில், வரப்பு ஓரங்களில், 2 மீட்டர் இடைவெளியில் ஆமணக்கு செடிகளை நட்டால், புரோடீயா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.
கம்பு (Rye)
நிலக்கடலையில் ஏக்கருக்கு 250 கிராம் கம்பு கலப்பு பயிராக விதைத்தால், நிலக்கடலையைத் தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துபூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
ஊடுபயிர் (Intercropping)
-
சோளத்தில், துவரை, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்தால், தத்துப்பூச்சி, காய்ப்புமுக்களை கட்டுப் படுத்தலாம்.
-
மக்காச்சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிட்டால் புரொடினியாப் புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்
-
மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதால், குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
விவசாயிகள் தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் - மோடி உரை!!
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!
கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!