உருவத்தில் டிராகனை நினைவுபடுத்தும், டிராகன் பழங்கள் விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி அருகிலுள்ள உள்ள தனியார் தோட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.
வரலாறு (History)
அமெரிக்கா தாயகமாகக் கொண்டது இந்தியா வில் 1990ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்தப் பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 121ஹெக்டர் பரப்பளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும்.
20 ஆண்டுகளுக்குக் காய்க்கும் (Fruits for 20 years)
ஆனால் ஓரு முறைச் செடியை நட்டு வைத்தால் இருபது வருடங்களுக்குக் காய்க்கும் தன்மை கொண்டது. அதிக கிளைகள் உடையது.
இந்தச் செடிகளில், படரும் தன்மை கொண்டது இலைகள் முட்களாக மாறுபட்டு இருப்பது சிறப்பு. இதன் தண்டுகள் தண்ணீர் சேமிக்கும் திறன் கொண்டதாக இருப்பது தனிச்சிறப்பு.
ஒளிச் சேர்க்கை (Addition of light)
இதில் இலைகளுக்குப் பதிலாகத் தண்டுகள் மூலம் ஒளிச் சேர்க்கை நடைபெறும். வறண்ட வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிட ஏற்றது.
தண்டுகள் மூன்று பக்கங்ளைக் கொண்டதாகவும், கொம்பு போன்ற ஓரங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
மலர்கள் இரவில் மலரும் தன்மை கொண்டது. இதன் வேர் கள் 30-40செ.மி வரை வளரக்கூடியது. சூரிய ஒளி அவசியம் இந்த பயிருக்கு தேவை. வேரில் தண்ணீர் தேங்கி நிற்காமல் தொடர்ந்து பார்த்து கொள்ள வேண்டும்.தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும்.
நடவு (Planting)
செடிகள் நடுவதற்கு முன்பு 5-6அடி உயரமுள்ள கல் தூண்கள் அல்லது சிமெண்ட் தூண்களை 3-4 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
செடிகளை தாங்கி வளருவதற்குத் தூண்களின் நுனியில் நான்கு துளைகள் உள்ள வட்ட வடிவிலான சிமெண்ட் சிலாப் அல்லது உலோகத் தட்டுகளைத் தூண்களின் நுனியில் பொருத்த வேண்டியது அவசியம். செடிகளை நட்டப் பிறகு வளரும், முதன்மை கிளைகளைக் தூண்களின் உயரம் வரைக் கொண்டு செல்ல வேண்டும்.
அறுவடை (Harvest)
நட்டப் பிறகு, 15-18மாதங்களில் பழம் அறுவடைக்கு வரும் 5 வருடத்திற்குப் பின்னர் நிலையான மகசூல் கிடைக்கும்.
பூக்கும் பருவம் (Flowering season)
மே முதல் செப்டம்பர் மாதம் வரை பூக்கள் பூக்கும்
பழங்களை ஜுலை முதல் டிசம்பர் வரை அறுவடை செய்ய முடியும்.
பூக்கள் பூத்தது முதல் அறுவடை செய்ய 40-50நாட்கள் ஆகும். பழங்கள் நல்ல வாசனை உடன் சற்று புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!