கோவை மாவட்டம் சூலுார் வட்டாரத்தில், 508 எக்டேர் பரப்பில், சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு தோட்டக்கலைத்துறை சார்பில், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்த நீர் (Low water)
கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், பூமியில் நிலத்தடி நீர் வற்றியுள்ளது. இத்தகையச் சூழ்நிலைகளில், குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி, குறுகியக் காலப் பயிர்களை சாகுபடி செய்வது, சாமர்த்தியமான ஒன்றாகும்.
தண்ணீர் வீணாவது தடுக்கப்படும் (Water wastage will be prevented)
சொட்டு நீர் பாசனம் அமைப்பதால், தண்ணீர் ஆவியாவதும், வீணாக விரையமாவதும் தடுக்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத் தோட்டக்கலைத்துறை சார்பில், சூலுார் வட்டாரத்தில், 508 எக்டேர் பரப்பளவில், சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியதாவது:
508 எக்டேர் இலக்கு (508 hectare target)
தோட்டக்கலைத்துறை சார்பில், 2021--22 ஆண்டுக்கான சொட்டு நீர் பாசனம் அமைக்க, சூலூர் வட்டாரத்தில், 508 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.4.67 கோடி நிதி (Rs. 4.67 crore fund)
அதற்காக, ரூ.4.67 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தில், ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் பெற முடியும்.
75 % மானியம் (75% subsidy)
அதேவேளையில் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல், சிறு, குறு விவசாய சான்று, புகைப்படங்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்புக்கு (Contact)
மேலும் விபரங்களுக்குத் துணை தோட்டக்கலைத்துறை அலுவலர் சேகரை - 99442 64889 என்ற செல்போன் எண்ணிலும், உதவி அலுவலர்கள், தியாகராஜனை - 97865 55569 என்ற எண்ணிலும், சேட்டுவை -80151 63864 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!
பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!
நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!