1. விவசாய தகவல்கள்

ராணிப்பேட்டையில் சிறு குறு விவசாயப் பயன்பாட்டுக்கு வாடகையின்றி டிராக்டர்!

R. Balakrishnan
R. Balakrishnan
Tractor
Credit : Autocare

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகள் பயன்பாட்டுக்கு வாடகையின்றி டிராக்டர் அளிக்கப்படும் என்று வேளாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

வாடகையின்றி டிராக்டர்

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி விவசாய பொருட்கள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் (Marketing) மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான எந்திரங்களின் புழக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு ஊரடங்கு (Curfew) காலத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு டபே நிறுவனத்தின் ஜெபார்ம் ஆகியவை இணைந்து மாஸே பெர்குசன், ஐஷர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் எந்திரங்களை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்வதற்காக 60 நாட்களுக்கு வாடகை இன்றி இலவசமாக (Free) உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

முன்பதிவு

விவசாயிகள் இந்த சேவையை பெற உழவன் செயலியில் (Ulzavan App) உள்ள வேளாண் எந்திர வாடகை சேவை மூலமாகவோ அல்லது டபே நிறுவனத்தின் ஜெபார்ம் சேவை மையத்தில் 1800 4200 100 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது சேவைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் டேனியல் என்பவரின் செல்போன் 9500691658 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி பயன் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஊட்டியில் மண் மாதிரி சேகரித்து, மண்வள அறிக்கை அளிக்கும் வேளாண் அலுவலர்கள்

பருத்தியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

English Summary: Tractor without rent for small and marginal agricultural use in Ranipettai! Published on: 06 June 2021, 01:35 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.