Horticulture

Thursday, 22 July 2021 08:55 PM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் மண்புழு வளர்க்க மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நண்பன் (Friend of the farmer)

விவசாயிகளின் நண்பன் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது மண்புழு. அந்த வகையில் விவசாய சாகுபடிக்கு உறுணையாக இருக்கும் மண்புழுக்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல் (Horticultural Instruction)

அவ்வாறு மண்புழுவை வளர்க்க முன்வருவோருக்கு மானியம் அளித்து உதவுகிறது அரசு. எனவே விவசாய சாகுபடிக்கு உறுதுணையாக இருக்கும் மண் புழு வளர்ப்புக்கான மானியம் பெற விவசாயிகள் அணுகலாம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

பழமையானது (The oldest)

மண்ணின் மைந்தன் என அழைக்கப்படும் மண் புழுக்கள், பூமியில் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்து வருகின்றன.

அதிகரிக்கும் நுண்ணுயிர்கள் (Increasing microorganisms)

மண் புழுக்கள், கழிவுகளை மட்க செய்து உரமாக்கி, பயிர்கள் நன்கு கிரகித்து கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மண்ணில் உள்ள சத்துகளான நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை பயிர்களுக்கு எளிதாகக் கிடைத்து, மண்ணின் வளம் மேம்படுகிறது.

தேர்வு முக்கியம் (Choice is important)

விவசாயிகள் அனைத்து சூழ்நிலைகளிலும் வளரும் தன்மையுடைய மண்புழு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

மண்புழுக்கள் வகைகள் (Types of earthworms)

  • இதில் எப்பஜிக் ரக மண் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் எல்லா சூழ்நிலையிலும் ஏற்புடையதாக உள்ளது.

  • எண்டோஜிக் வகை புழுக்கள், மண்ணின் மேற்பரப்பிலிருந்து 30 செ.மீ., ஆழத்துக்குக் கீழ் வளரக்கூடியதாகும்.

  • அனிசிக் ரக புழுக்கள் மண்ணின் கீழ்ப்பக்கத்தில் 3 மீ., தூரம் வரை சென்று வசிப்பதால் மண்ணில் துளைகள் ஏற்பட்டு வேருக்குக் காற்றும், நீரும் எளிதாகச் சென்று சேரும்.

ஆப்பிரிக்க ரகம் (African variety)

நிலப்பரப்பின் மேல் வளர்ந்து குறுகிய கால இடைவெளியில் அதிகளவு மண் புழு உரம் பெற ஆப்பிரிக்கன் மற்றும் ஐரோப்பியன் மண்புழு ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்யலாம்.

3 ஆண்டுகள் (3 years)

மண் புழுவானது தினசரி 12 மி.மீ., வளர்ச்சியும், 4-3 மில்லி கிராம் உடல் வளர்ச்சியும் கொண்டதாகும். புழுக்களின் வாழ்நாள் 2-3 ஆண்டுகளாகும். மண் புழு வளர்ப்பு மற்றும் மானியத்திட்டங்களை தெரிந்து கொள்ள உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் ஐந்து ஆண்டு கால சாதனை : ரூ. 90,000 கோடி காப்பீடு வழங்கல்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)