1. தோட்டக்கலை

ஸ்டார் ரக மல்லிகை சாகுபடிக்கு 40%மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
40% subsidy for Star Jasmine cultivation!
Credit: Oneindia Tamil

மதுரையில் ஸ்டார் ரக மல்லிகைப்பூ சாகுபடிக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

மயக்கும் மல்லிகை (Enchanting Jasmine)

பூக்களில் நம்மை மயக்கும் மணம் கொண்டது என்றாலே அது மல்லிகைப்பூதான். அதனால்தான் காலம் காலமாக, மல்லிகைப்பூவைக் கோயில் பூஜைகளில் தவறாமல் பயன்படுத்துகின்றனர்.

தெய்வீகத்தன்மை (Divinity)

அதிலும் மல்லிகை மொட்டு மாலை அணியும்போது, கோவில் சிலைகளுக்கும் தெய்வீகத்தன்மை கூடிவிடுகிறது என்றே சொல்லலாம்.

இதுகுறித்துத் தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி கூறியதாவது:

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் மல்லிகைக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.

இதேபோல், இதர விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்திலும் மல்லிகை கன்றுகள் வழங்கப்படும்.

 ரூ.6.40 நிதி ஒதுக்கீடு (Rs.6.40 crore financial allocation)

இதற்காக ரூ.6.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலைப்பண்ணையிலிருந்து கன்றுகள் வினியோகிக்கப்படும்.

கோ 1 ரக ஸ்டார் மல்லி (Go 1 Type Star jasmine)

இதற்காக வேளாண் பல்கலைக்கழகத்தின் கோ 1 ரக ஸ்டார் மல்லிகை நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன்படி தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த ஸ்டார் மல்லிகை சாகுபடி செய்யும்விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

ஆண்டு முழுவதும் மலரும் (Flowering throughout the year)

நீண்ட காம்புடன் கூடிய இந்த ரகம் , தடித்த இளஞ்சிவப்பு நிற மொட்டுடன் ஆண்டு முழுவதும் பூக்கும்.

ரூ.1.60 லட்சம் நிதி (Rs.1.60 lakh fund)

எக்டேருக்கு 7.50 டன் மகசூல் தரும். ஸ்டார் மல்லிகை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக மதுரை மாவட்டத்திற்கு ரூ.1.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

 

English Summary: 40% subsidy for Star Jasmine cultivation! Published on: 14 July 2021, 10:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.