Horticulture

Friday, 15 July 2022 04:26 PM , by: Poonguzhali R

காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் எனவும், விவசாயத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.


அரசானது விவசாயத்தினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பல நலத்திட்டங்க்களைச் செய்து வருகின்றது. மானியங்கள், ஊக்கத்தொகை, காப்பீடு என பல்வேறு செயல்களின் மூலம் விவசாயத்தினை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுதும், காய்கறிகளைப் பயிரிட்டுக் கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகையினை வழங்க உள்ளது.

தேவையான ஆவணங்கள்

  • புகைப்படம்
  • ஆதார் அட்டை
  • தொலைப்பேசி எண்
  • நிலத்தின் சிட்டா
  • நிலத்தின் அடங்கல்

காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் என செம்பனார்கோவில் வட்டாரத் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோயில் வட்டாரத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர் என்பதால் இவ்வாறான சலுகை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் அவர் கூறியன கீழே கொடுக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!

மாநிலத் தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி, பழம், பூ முதலியவைகளை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறையின் மூலம் முழு மானியத்துடன் காய்கறி விதைகள் மற்றும் குழித்தட்டு முறை நாற்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!

சொட்டு நீர் பாசன வசதிகள் மாங்காய், முந்திரி போன்ற பல்லாண்டு பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் குறைந்த நீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெறச் சொட்டு நீர் பாசன வசதிகள் அமைத்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகள் 75 சதவீதம் மானியத்தின் மூலம் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் அடிப்படையில், ஆயில் என்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரம் மற்றும் பி.வி.சி. பைப் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் தண்ணீர் சேகரிக்கும் தொட்டி அமைப்பதற்கு ரூ.40 ஆயிரம் என இவை அனைத்தும் 50 சதவீ மானியத்தில் வழங்கப்படுகின்றது.

ஊக்கத்தொகை காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் எனும் வீதத்தில் 2½ ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். எனவே தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கப்படும் இடுபொருளைப் பெற்றுச் சாகுபடி செய்து உழவர் சந்தையில் விற்பனை செய்து பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க

50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

புளி-யின் மருத்துவப் பயன்கள் தெரியுமா? ஆச்சர்யத் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)