திருச்சி மாவட்டத்தில் அரசு மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்தான் உயிர்நாடி (Water is the lifeblood)
விவசாயத்தின் உயிர்நாடி என வருணிக்கப்படுவது நீர்பாசனம்தான். ஆக நீர் சாகுபடிக்குத் தேவையான அளவுக் கிடைப்பதும், மழை கைகொடுப்பதும்தான் அந்த பருவத்திற்கான அதிக மகசூலைப் பெற வழிவகை செய்கிறது.
எனவே விவசாயத்திற்கான நீர்ஆதாரத்தைப் பெருக்குவதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சத வீத மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிசி, எம்பிசி, மற்றும் சீா்மரபினா் வகுப்புகளைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளேத் தகுதியானவர்கள்.
எவ்வளவு கடன்? (How much debt?)
இதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீதத் தொகை அரசு மானியமாக வழங்கப்படும். அதாவது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அளிக்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
-
சாதிச்சான்று
-
இருப்பிடச்சான்று
-
வட்டாட்சியரிடமிருந்து பெற்ற சிறுகுறு விவசாயிக்கான சான்று
-
நில உடைமைக்கு ஆதாரமான கணினி வழிப் பட்டா
-
அடங்கல் நகல்
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மேலேக் கூறிய ஆவணங்களை, விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகிப் பயன் பெறலாம்.
தகவல்
சு. சிவராசு
திருச்சி மாவட்ட ஆட்சியா்
மேலும் படிக்க...
வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!
தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!