15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 September, 2021 11:32 AM IST
Fish amino acid as an alternative to urea - guaranteed high yield!
Credit : Vivasayam

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், மீன் அமினோ அமிலத்தைப் பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைப்பது உறுதி.

மீன் அமினோ அமிலம் (Fish amino acid)

விவசாயிகள் தங்கள் பயிர்கள் நன்றாக செழிப்பாக அதிகளவில் பசுமையாக இருக்க வேண்டும். மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தழைச்சத்து உரங்களை அதிகளவில் பயன்படுத்து கின்றனர். அதிகப் பசுமை காரணமாக பூச்சித்தாக்குதல் ஏற்படும் நிலைமை மற்றும் மண் வளம் குறைதல் போன்ற பின் விளைவுகளை எதிர் கொள்கின்றனர்.

இந்த பின்விளைவுகளைத் தடுக்க மீன் அமினோ அமிலம் பெரிதும் பயன்படுகிறது. இதனை எளிதாக எந்த ஒரு அதிகளவில் செலவுகள் இன்றி விவசாயிகளுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உதவும் வகையில் எளிதாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம்.

மீனில் உள்ளப் புரதங்கள் நுண்ணுயிர் களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாகப் பிரிகின்றன. இதில் நைட்ரஜன் சத்து தழைச்சத்து அதிகம் காணப்படுகிறது.

தேவையான பொருட்கள் (required things)

5 கிலோ மீன் கழிவுகள் (மீன் மார்க்கெட்டில் இலவசமாக வாங்கி கொள்ளலாம்). மீன் கழிவுகள் கிடைக்கா விட்டால் முழு மீனைத் துண்டாக வெட்டி பயன்படுத்தலாம். 5 கிலோ நாட்டுச் சர்க்கரை (அ) வெல்லம். பிளாஸ்டிக்வாளி (அ)டிரம்.

தயாரிப்பு முறை (Production method)

  • 5 கிலோ மீன் கழிவுகள் (அ) முழு மீனைத் துண்டாக வெட்டிக் கொள்ளவும்.

    5 கிலோ நாட்டுச் சர்க்கரையை மீன் கழிவுகளுடன் சேர்க்க வேண்டும். (வெல்லம் எடுத்துக் கொண்டால் நன்றாகத் தூளாக்கிச் சேர்க்க வேண்டும்)

  • இரண்டையும் விகிதத்தில் (1:1) கலந்து பிளாஸ்டிக் வாளியில் காற்று புகாதவாறு நன்றாக மூடி நிழலில் வைக்க வேண்டும்.

  • சரியாக 30-40 நாட்களில் மீன் அமினோ அமிலம் தயாராகி விடும். இதிலிருந்து எவ்வித கெட்ட வாடையும் வராது.

  • அதாவது, பழ வாடை வரும் என்பதே மீன் அமினோ அமிலம் தயாரானது என்பதற்கு அறிகுறி.

  • இதனை வடிகட்டி 6 மாத காலம் வரைப் பயன்படுத்தலாம்.

  • தயாரித்த மீன் அமினோ அமிலத்தை 2-5 மி.லியை லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

  • இதனை நேரடியாகவும் மண்ணில் இடலாம் அல்லது தாவரத்தின் இலைகளில் தெளிக்கலாம்.

  • தாவரங்கள் திட வகை உரங்களை விட, திரவ உரங்களிலிருந்து ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சும்.

பயன்கள் (uses)

  • பயிருக்கு தழைச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய யூரியாவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மீன் அமினோ அமிலத்தைப் பயன்படுத்தலாம்.

  • மீன் அமினோ அமிலம் 75% வளர்ச்சி ஊக்கியாகவும், 25% பூச்சி விரட்டியாகவும் செயல்படக்கூடியது.

  • இதனைப் பூக்கும் தருணத்தில் பயன்படுத்தினால், மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற்று பூக்கள் நன்றாக பூத்து காய்க்கும் திறன் அதிகரிக்கும்.

  • வேர் வளர்ச்சியை ஊக்குவித்தல், ஒளிச்சேர்க்கையை மேம்படுத்துதல், பயிர் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதால், அதிக மகசூல் கிடைக்கும். பயிர் விளைச்சலை10% - 40% அதிகரிக்க உதவும்.

  • சுற்றுச்சூழலுக்கு உகந்த, விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவக் கூடியதாக இருக்கும்.

  • இதனை வரப்பு மற்றும் வேலி ஓரங்களில் தெளித்தால் மயில், முயல் மற்றும் எலி தொந்தரவு தெளித்த ஐந்து நாட்கள் வரை இருக்காது.

தகவல்

அ. அக்ஸிலியா மேரி,

இளங்கலை வேளாண்மை 4ம் ஆண்டு,

அண்ணாமலை பல்கலைக்கழகம்

மேலும் படிக்க...

PM Kisan தவணை: மொபைல்-ஆப்பில் விவசாயிகள் பதிவு செய்வது எப்படி?

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 15ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை!

English Summary: Fish amino acid as an alternative to urea - guaranteed high yield!
Published on: 13 September 2021, 11:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now