1. விவசாய தகவல்கள்

PM Kisan தவணை: மொபைல்-ஆப்பில் விவசாயிகள் பதிவு செய்வது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM Kisan Installment: Farmers book in this mobile-app!
Credit : Jagran Josh

பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6,000 நிதியுதவியை, புதிய மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்துகொண்டு பெறலாம்.

பிரதமரின் கிசான் (Prime Minister's Kisan)

விவசாயிகளின் நலன்கருதி மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது பிரதமரின் கிசான் திட்டம்(PM Kisan Scheme) .

ரூ.6000 நிதியுதவி (Rs.6000 financial assistance)

இந்த பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் நிதியதவி வழங்கப்படுகிறுது. இது, மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

ரூ. 1.38 லட்சம் கோடி (Rs. 1.38 lakh crore)

இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.38 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இதன் காரணமாக, பிரதமரின் கிசான் திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


இதன் 9வது தவணையாக கடந்த மாதம் 9.75 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.19,500 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தக் கொரோனா நெருக்கடி காலத்தில், விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.

புதிய மொபைல்-ஆப் (New mobile-app)

எனவே பிஎம் கிசான் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகளின் நலனுக்காக புதிய மொபைல்-ஆப் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு, எளிமையான முறையில் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 நிதியுதவியைப் பெற முடியும்.

மொபைல்-ஆப்பில் முன்பதிவு (Registration in mobile-app)

இது குறித்த விபரங்களை www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வழிமுறைகள் (Registration  instructions)

  • முதலில் PMKisan GOI Mobile App யை உங்கள் செல்போனில், Google Play Store உதவியுடன் பதிவிறக்கம் (downloading) செய்துகொள்ளவும்.

  • இதனை செய்வது மிகவும் எளிது. ஏனெனில் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதியுடன் இந்த App வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • எனவே உங்கள் உள்ளூர் மொழியில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

  • பிறகு New Farmer Registration என்பதை கிளிக் செய்யவும்.

  • உங்கள் ஆதார் அட்டையின் எண் மற்றும் அங்கு தோன்றும் Captcha Code கை உள்ளீடு (Enter)செய்துவிட்டு, Continue buttonயை கிளிக் செய்யவும்.

  • தொடர்ந்து, உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு விபரம், வங்கியின் IFSC code ஆகியவற்றைப் முன்பதிவு செய்யும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும்.

  • இதையடுத்து submit button கிளிக் செய்யவும். இத்துடன் PM Kisan mobile app உங்களுடைய முன்பதிவு வழிமுறைகள் நிறைவடைகின்றன.

தொடர்புக்கு  (Contact)

கூடுதல் விபரங்களுக்கு PM Kisan's helpline number 155261 / 011-24300606யை விவசாயிகள் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 15ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை

English Summary: PM Kisan Installment: Mobile-App Farmers Registration Instructions! Published on: 13 September 2021, 10:21 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.