Horticulture

Friday, 06 November 2020 07:51 AM , by: Elavarse Sivakumar

கால்நடை பராமரிப்பில் 70 சதவீத செலவு தீவனத்திற்கு மட்டுமே போகிறது. எனவே, தீவன பயிர்களை விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே பயிரிட்டு தீவன செலவை குறைத்துக்கொள்ளலாம்.

அவ்வாறு பயிரிடும் போது, கீழ்கண்ட விதை நேர்த்தி முறைகளை கடைபிடித்தால் விதை உறக்கத்தை நீக்கி, விதைகளின் முனைப்பு திறன் வீரியம் மற்றும் பயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்

தீவனச்சோளம்

6 பொட்டலம் அசோபாஸ் (1200கி/எக்டேர்) கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்

தீவன மக்காச்சோளம்

விதைப்பதற்கு முன்னர் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் மற்றும் 200 கிராம் கார்பரில் மருந்தை நன்றாக கலந்து விதைக்க வேண்டும்.

நீல கொழுக்கட்டை புல்

  • அறுவடை செய்த நாளில் இருந்து 6-8 மாதங்கள் விதைகள் உறக்க நிலையில் காணப்படும்.

  • எனவே விவசாயிகள் ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாசிய நைட்ரைட் கலந்து விதைகளை 48 மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைக்க வேண்டும்

வேலி மசால்

  • விதைகளின் மேலுறை கடினத்தன்மையாக இருப்பதால் விதைகள் விதை உறக்க நிலையில் காணப்படும்.

  • எனவே விதை உறக்கத்தை போக்க தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 4 நிமிடம் கழித்து வேலி மசால் விதைகளை அந்த கொதிக்க வைத்த நீரில் 5 நிமிடம் வைக்க வேண்டும்.

  • பின்னர் குளிர்ந்த நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து விதைக்க வேண்டும்.

  • அல்லது ஒரு கிலோ விதைக்கு 200 மில்லி அடர் கந்தக அமிலம் ஊற்றி 15 நிமிடம் கிளறி விட வேண்டும் பின்னர் தண்ணீரில் நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

தகவல்
முனைவர். ப.வேணுதேவன் மற்றும் மருஆ.சுமித்ரா,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
அருப்புக் கோட்டை.

மேலும் படிக்க...

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)