1. விவசாய தகவல்கள்

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

திருந்திய நெல் சாகுபடி (Transformed Paddy Cultivation) முறையில் பல்வேறு பயன்கள் கிடைப்பதால், விவசாயிகள் இதனை மேற்கொள்ள முன்வரலாம் என வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோட்பாடுகள் (Concept)

 • பாய் நாற்றங்கால் அமைத்து விதைப்பு செய்தல்

 • குறைந்த விதையான 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுக்கள்

 • குத்துக்கு ஒரு நாற்று நடவு செய்தல்

 • ரோட்டு வீடர் அல்லது கோனோ வீடர் என்ஸனும் களைக்கருவிகளை உபயோகித்து மண்ணை கிளரி விட்டுக் களையைக் கட்டுப்படுத்துதல்

 • நீர் மறைய நீர்க்கட்டுதல்

பயன்கள் (Benefits)

 • குறைந்த விதை அளவு போதுமானது

 • நாற்றங்கால் பரப்பளவு மிகவும் குறைவதால் பராமரிப்பு செலவு குறைகிறது

 • குறைந்த வயதுடைய நாற்றுகளை நடுவதினால் பக்க தூர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

 • அதிக இடைவெளியல் எண்ணிக்கை குறைகிறது

 • பெண்களைக் கொண்டு பாய் நாற்றங்களை மிக சுலபமாக அமைக்கலாம்.

 • களை கருவியினை பெண்களைக்கொண்டு சுலபமாக இயக்கலாம்.

 • சதுர முறையில் நடவு செய்வதால் பயிர்களுக்குத் தேவையான சூரிய ஒளி காற்று மற்றும் ஊட்டச்சத்துகள் தடையின்றி கிடைக்கிறது.

 • உற்பத்தி திறன் மிகுந்த பக்கத் தூர்கள் அதிகம் தோன்றுவதால் அதிக தானியம் மற்றும் வைக்கோல் மகசூல் கிடைக்கிறது.

 • நடைமுறையில் உள்ள நீர் பாசன முறையில் தேவைப்படும் நீரினைக் கொண்டு இருமடங்கு பரப்பில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளலாம்

தகவல்
முனைவர் அனுராதா
மண்ணியல் துறை

மேலும் படிக்க...

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

English Summary: Transformed paddy cultivation that gives double cultivation!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.