மக்காசோளம் பயிர்களில் படைப்புழுக்கள் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறைக்கபட்ட கொள்முதல் விலையை மாற்றி அமைத்து, உரிய ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள கோழிப் பண்ணை மற்றும் மாட்டுத்தீவனங்களுக்காகவும், மேலும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு என ஆண்டுக்கு 30 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை உள்ளது.
படைப்புழுக்கள் தாக்குதல்
தமிழகத்தில், மக்காசோளம் சாகுபடி செய்யப்பட பயிர்களில் அமெரிக்க படைப்புழுக்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது, ஏற்கனவே கடந்த 2018 அமெரிக்க படைபுழுக்கள் பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது, இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். அதை தொடர்ந்து படைப்புழுக்களை கட்டுப்படுத்த, 2019ல், அரசு 48 கோடி ரூபாய் செலவிட்டதைத் தொடர்ந்து பாதிப்பு கட்டுக்குள் வந்தது. தற்போது கடலுார், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விளையும் மக்காச்சோளப் பியிர்களில் படைப்புழுக்களின் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
ஆதார விலை நிர்ணயிக்க கோரிக்கை
இதனிடையே, மத்திய அரசு வேளாண் விற்பனை வாரிய தகவல்படி மக்காச்சோளத்தின் கொள்முதல் விலை, குவிண்டால், 1,430 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்தின் தேவை அதிகரிப்பு காரணமாக குவிண்டாலுக்கு 2,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த ஜனவரியில் குவிண்டாலுக்கு 2000 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் பரவை காய்சல், கொரோனா தொற்று போன்ற காரணங்களால் கறிக்கோழி உற்பத்தி தொழிலில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளட. தீவன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இதானால் மக்கச்சோளம் கொள்முதல் விலையும் வெகுவாக குறைந்தது.
சில மாதங்களில், கொள்முதல் விலை, 600 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது, ஏற்கனவே அமெரிக்க படைப்புழு தாக்குதல் காரணமாக சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்த நிலையில், தற்போது மத்திய அரசின் இந்த விலை குறைப்பு விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே மக்காச்சோளத்திற்கு உரிய ஆதார விலையை நிர்ணயிக்கவேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க...
வெட்டுக்கிளிகள் வந்தால் தடுப்பது எப்படி? கோவையில் அதிகாரிகள் ஆலோசனை!