1. செய்திகள்

Locust: வெட்டுக்கிளிகள் வந்தால் தடுப்பது எப்படி? கோவையில் அதிகாரிகள் ஆலோசனை!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பாலைவன வெட்டுக்கிளிகளை (Locust) தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர்கள் வெங்கடேஷ், பிரின்ஸ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி, வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தலைவர் முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், ராஜாமணி நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தள் பகுதியில் வெட்டுக்கிளிகள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வேளாண் பல்கலை விஞ்ஞானிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள், பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்கு காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளி வகையை சார்ந்தது இல்லை என்பதை உறுதிசெய்துள்ளனர்.

கோவைக்கு பாலைவன வெட்டுக்கிளி வராது

கோவையில் பாலைவன வெட்டுக்கிளிகள் ஊடுருவ வாய்ப்புகள் குறைவு என்றும் கூறிய மாவட்ட ஆட்சியர், எனினும், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்

  • அரசு பரிந்துரைக்கப்பட்ட உயிரி பூச்சிக்கொல்லிகள், ராசயன மருந்துகள், உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு வைத்திருக்கவேண்டும்.

  • வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால், விவசாயிகள் வேளாண் அலுவலர்கள் ஆலோசனை பெற்று, டிரம் அல்லது டின்களை கொண்டு ஒலி எழுப்புவதால் தடுக்கலாம்.

  • 'அசாடிராக்டின்' என்ற, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேம்பு சார்ந்த தாவரபூச்சிக்கொல்லியை பயன்படுத்தலாம்.

  • பெருங்கூட்டமாக தென்பட்டால், 'மாலத்தியான்' மருந்தை உரிய பிற மருந்துகளுடன் கலந்து, தெளிப்பான்கள் வாயிலாக தெளிக்கலாம்.

  • வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால், அருகிலுள்ள வேளாண், தோட்டக்கலை அலுவலர்களிடம் தகவல்கள் தெரிவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்

வந்தவாசியில் வெட்டுக்கிளிகள் அட்டூழியம்

இதேபோன்று திருவண்ணமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்திலும் கடந்து சில தினங்களாக வெட்டுக்களிகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இப்பகுதியில் உள்ள சூரியமூர்த்தி என்பவரது நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஓரு ஏக்கர் நெற்பயிர்களையும், தற்போது பயிரிட்ட விளைச்சல் நிலமான 2 ஏக்கரில் பல்லாயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் புகுந்து நெற்பயிற்களை சேதம் செய்து வருகின்றது. இதே போன்று குமார் என்பவரின் நிலத்தில் வெட்டுக்கிளிகள் புகுந்து நாசம் செய்துள்ளன. இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன்ர்.

மேலும் படிக்க..
Locust Attack: தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பரவலா? விவசாயிகள் பீதி!
தமிழகத்தில் வெட்டுக்கிளி தாக்குதலா...? கிருஷ்ணகிரி, கோவையில் பரபரப்பு தேடுதல் வேட்டை!

English Summary: A meeting on prevention of Locust was held at the District Collectorate of Coimbatore

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.