Horticulture

Wednesday, 13 April 2022 05:30 PM , by: Poonguzhali R

Gooseberry Cultivation Method and Benefits!

பொதுவாக நெல்லி நடுவதற்கு ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது நல்லது.  அதை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும்.  அதன் பின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 

வேப்ப இலைகளை நன்கு காய வைத்துத் தூள் செய்து கொண்டு அந்த தூளை ஒரு பிடி எனும் அளவில் நெல்லியின் வேர் பகுதியில் போட வேண்டும் இது அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது.  அதோடு ஒரு கையளவு மாட்டுச் சாணத்தை சுமார் 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை எனும் நிலையில் ஊற்றி வர வேண்டும். 

பூச்சிக்கொல்லியாகச் செயல்படும் வேப்ப எண்ணெயை மாதம் ஒரு முறை தெளித்தும், சமையலறை கழிவுகளையும் பயன்படுத்தலாம்.

பூச்சிகளிடமிருந்து செடிகளைக் காக்கச் சமையலறையில் பயன்படுத்தும் குப்பைகளில் இருந்து செய்யும் உரமும், பஞ்சகாவ்யா உரமும் மிகுந்த பலனைக் கொடுக்க வல்லது.  அதிலும் குறிப்பாக, டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாகப் பயன்படுத்தலாம். 

நெல்லிச்செடி வளர வளர நுனிகளைக் கிள்ளி விட்டுப் பக்கக்கிளைகளை வளரவிட வேண்டும்.  பக்கக்கிளைகளின் எண்ணிக்கையில் மூன்று கிளைகளுக்கு மேல் வளர விடத் தேவையில்லை.

பராமரிப்பு எனும் நிலையில் வாரம் ஒருமுறை என்று செடியைச் சுற்றி அடி மண்னைக் கொத்தி விட்டுப் பராமரிக்க வேண்டும். நெல்லிக்கனியின் பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

  • பொதுவாக நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது. நெல்லிக்காய் குளிர்ச்சித் தன்மை வாய்ந்த்தாக உள்ளதால் இதை உண்பதால் உடலின் சூடு குறையும்.
  • நெல்லிக்காய் உண்பதால் உடலில் சிறுநீர் பெருக்கத்திற்கு இது உதவும். நன்கு பசியைத் தூண்டும். 
  • குடல் வாயு, எலும்புருக்கி, கொப்புளங்கள் ஆகியவற்றை நீக்கும்.
  • இதை தினம் ஒன்று எனும் நிலையில் சாப்பிட்டு வந்தால் சளிப் பிரச்சனை குறையும்.
  • சுவாச மண்டலத்தை இது சீராக வைக்க உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தைப் போக்கி நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.
  • .இது கண்ணின் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. அதோடு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் முதலான கண் குறைகளைக் களைய இது உதவுகிறது.
  • உடலின் இரத்த்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்திச் சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • உடலுக்கு ஏற்ற நல்ல எதிர்ப்பாற்றலைத் தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க...

தொப்பையைக் குறைக்க உதவும் நெல்லி- 3 வாரத்தில் குட்பை சொல்ல உதவுகிறது!

பூக்களின் விலை சரசரவென உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)