மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தொடர்ந்து விவசாயத்திற்கு என பல்வேறு மானியத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன. அந்த வகையில் தோட்டக்கலையில் மானியம் வழங்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தோட்டக்கலையில் மானியம் வழங்கப்படுவது தொடர்பாக கோவை துணை இயக்குநர், ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தோட்டக்கலை செய்து வரும் விவசாயிகளுக்கு மற்றும் புதிதாக விவசாயம் சார்ந்த தொழில் செய்ய முயற்சிப்போர்களுக்கு பெரிதும் பலன் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதைப் பற்றிய விரிவான தகவல்கள் இப்பதிவில் பார்க்கலாம்.
2022-23ஆம் நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், அனைத்துத் திட்டங்களிலும் இணையதளம் வழியாகப் பதிவு செய்த விவசாயிகளுக்கே மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதற்காகப் பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி tnhorticulture.tn.gov.in/tnhortnet எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இணைதள முகவரியில் முறைப்படி பதிவு செய்து விவசாயிகள் பயன் அடையலாம், மேலும் இதில் விவசாயிகள் தாங்களாகப் பதிவு செய்ய தெரியாத மற்றும் இயலாத விவசாயிகள் அவரவர் வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகிப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள்:
ஆதார் எண் |
விவசாயி-இன் பெயர் |
கைபேசி எண் |
மாவட்டம் |
வட்டம் |
கிராமம் |
வீட்டு முகவரி |
அஞ்சல் குறியீடு |
செயல்படுத்தப்படும் திட்டங்கள்:
தேசிய தோட்டக்கலை இயக்கம் | (NHM) |
தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் | (NADP) |
நிலையான விவசாயத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பரப்பு மேம்பாடு | (RAD) |
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் | (IHDS) |
தேசிய மூங்கில் இயக்கம் | (NBM) |
தேசிய ஆயுஷ் இயக்கம் | (NAM) |
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் | (TNIAMP) |
போன்ற திட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க:
தமிழகம்: ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 3 நாள் உணவுத் திருவிழா 2022