கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்துத் தப்பித்துக்கொள்ள உடலுக்கு உகந்த ஆடை என்றால் அது பருத்திதான். கோடை மட்டுமல்ல, அனைத்து தட்பவெப்பநிலைக்கும் பொருத்தமானது பருத்தியே.
எனவே ஆடை உற்பத்திக்கு பயன்பாட்டிற்காகவே பல ஆண்டுகளாக பருத்தி விளைவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பருத்தி பணப்பயிராகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் ஒரு முக்கியமான விவசாய பயிராக உள்ள பருத்தி, ஆசியா,ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்பட்டு வருகிறது.
குளிர்கால இறவை பயிராக ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திலும், கோடைகால பயிராக பிப்ரவரி – மார்ச் மாதத்திலும், மானாவாரி பயிராக செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும் பயிரிடலாம்.
பருத்தி சாகுபடியில் நல்ல மகசூல் பெற நிபுணர்கள் தரும் முக்கிய ஆலோசனைளைப் பார்ப்போம்.
நைட்ரஜன் ரத்து (Too much is bad, Too little is also bad)
பருத்தி சாகுபடிக்கு நைட்ரஜன் சத்து தேவை. இந்த சத்து அதிகமானாலும், மிகவும் குறைந்தாலும் விளைச்சல் பாதிக்கப்படும்.
அதிகப்படியான நைட்ரஜன் சத்து, அளவுக்கு அதிகமான வளர்ச்சியைத் தூண்டி, பருத்தி பந்துகளின் முதிர்வை தாமதப்படுத்திவிடும். அதேநேரத்தில், ஆகஸ்ட் மாதத்தில், நைட்ரஜன் சத்து இல்லாமல் போவதும், மிகக் குறைந்துவிடுவதும் நம்முடைய இலக்கை அடைய முடியாமல் தடுத்துவிடுகிறது. குறிப்பாப குளிர்காலத்திற்கு முன்னதாக பருத்தி பந்து, முதிர்ந்து வெடிக்க வேண்டியது முக்கியம்.
பொட்டாசியம் சத்து (Potash)
பொட்டாசியம் சத்து பருத்தி மகசூலுக்கு மிக மிக முக்கியமாகும். பருத்தி பந்து உருவாகும் போது, நைட்ரஜனை விட அதிகளவில் பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. பொட்டாசியம் சத்து குறையும் பட்சத்தில், பஞ்சு முதிர்வடைவது தள்ளிப்போகும். இது பருத்தியின் தரத்தைப் பெருமளவில் பாதிக்கும்.
வெப்பநிலை (Temperature)
பருத்தியை விதைக்கும் பருவத்தில் வெப்பநிலை மிக குறைவாக, அதாவது குளிர்காலமாக இருக்கக்கூடாது. ஒருவேளை வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸை விடக் குறைந்தால், பருத்தி சாகுபடியே பாதிப்புக்கு உள்ளாகும். பருத்தியை விதைக்கும்போது, மண்ணின் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல், குளிர்காலம் தீவிரம் அடையும்போது, காற்று மற்றும் மழையில் இருந்து பருத்தியை பாதுகாக்க வேண்டியது கட்டாயம்.
ஈரப்பதம் (warm soil)
பருத்தியை ஈரப்பதமான நிலத்தில், ஒன்று அல்லது ஒன்றரை அங்குலம் ஆழத்தில் விதைப்பது, அதன் வளர்ச்சிக்கு துணைபுரியும். அவ்வாறு விதைக்கும் போது ஆழத்தை அளவிடும் கருவியைப் பயன்படுத்திக் கொள்வது உகந்தது.
சுத்தம் (Start & Stay Clean)
பருத்தி விதைத்த நிலைத்தை, முடிந்த அளவுக்கு சுத்தமாக பராமரிக்க வேண்டும். பல அடுக்கு இயற்கை களைக்கொல்லிகளை பயன்படுத்துவது நல்லது. அதேநேரத்தில், களைக்கொல்லிகளில், சிறந்ததைத் தேர்வு செய்துவது உத்தமம்.
பூச்சித் தாக்குதல் (Season Insects)
பருத்தி பந்து வெடிக்கும் போது வெளிவரும் மணம் காரணமாக, பல்வேறு விதமான பூச்சிகள் தாக்கக்கூடிய ஆபத்து உள்ளது. இதனைத் தவிர்க்க பூச்சிகள் வருவதற்கு முன்பே, விழிப்புணர்வுடன் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும்.
நிபுணர்கள் தந்த யோசனைகளை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க..
வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட வாரியாக பயிர் வகைகள் அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்தில் பயிரிடவேண்டிய செம்பருத்தி - சாகுபடி முறைகள்!