1. விவசாய தகவல்கள்

அமெரிக்க படைப்புழுவின் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Pest attack maize

இந்தியா முழுவதிலும் அண்மைகாலமாக அமெரிக்க படைப்புழுக்கலின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இவை முதன்முறையாக அதன் தாயகமான அமெரிக்காவைத் தாண்டி நைஜீரியாவில் 2016 ஆம் ஆண்டு மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டது. தற்போது வரை 44 ஆப்பரிக்க நாடுகளில் முக்கிய உணவான மக்காச்சோளத்தில் மிகுந்த பாதிப்பையும் மகசூல் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் மே மாதத்தில்; கண்டறியப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இதன் தாக்குதல் பரவியுள்ளது.

தமிழகத்தில் அமெரிக்க படைப்புழு தாக்குதல் (Fall armyworm In tamilnadu)

தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் கரூர், தருமபுரி, நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக தென்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடும் பரப்பளவு ஆண்டுதோறும் அதிகரித்து தற்போது சுமார் 7000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றது. மேலும் இந்த படைப்புழு தாக்கவல்ல நெல், கரும்பு, சோளம், சிறுதானியங்கள் போன்றவை புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்படுகின்றது.

தாக்கும் பயிர்கள் ( Crops which affects)

  • இந்த படைப்புழுவின் தாக்குதல் சுமார் 80 வகையான பயிர்களில் கண்டறியப்பட்டுள்ளது. இவை தாக்குதலுக்கு மிகவும் விரும்புவது புல்வகை பயிர்களே ஆகும். மக்காச்சோளம் சோளம் மற்றும் புல்வகை களைகளில் இதன் தாக்குதல் அதிகம் தென்படும்.

  • இவற்றை தவிர பருத்தி சிறுதானியங்கள் நிலக்கடலை, கரும்பு, சோயாபீன்ஸ், புகையிலை மற்றும் கோதுமையிலும் இதன் தாக்குதல் பரவலாக தென்படும்.

  • காய்கறிபயிர்களை அதிகம் விரும்பாவிட்டாலும் அதிலும் இவை பாதிப்பை உண்டாக்கும்.

  • பழப்பயிர்களான ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் திராட்சை ஆகியவற்றினையும் தாக்கவல்லது.

Pest attack on maize

பாதிப்பு அறிகுறிகள் (Symptoms)

  • முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பதுதியில் சுரண்டி சேதத்தை உண்டுபண்ணும். சேதத்தால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக காணப்படும்.

  • இளம் புழுக்கள் நூலிழைகளை உருவாக்கும். இதன் மூலம் காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு செல்லும் இளம் செடிகளின் இலை உறைகளையும் முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும் அதிகம் சேதப்படுத்தும். இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.

  • மூன்று முதல் ஆறு நிலை புழக்கள் இலையுறையினுள் சென்று பதிப்பை உண்டாக்கும். இதனால் இலைகள் விரிவடையும் போது அதில் வரிசையாக துளைகள் தென்படும். மேலும் புழுவின் குழிகளும் காணப்படும் இளம் செடிகளில் நுனிக்குருத்து சேதமடைந்ததால் பக்க இலைகள் மற்றும் கதிர்கள் தோன்றும். ஒரு இலையுறையினுள் இரண்டு அல்லது மூன்று புழுக்கள் மட்டும் இருக்கும்.

  • உருவத்தில் பெரிதாக இருக்கும் புழு சிறிய புழுக்களை தின்றுவிடும். கதிர் உருவானதற்குபின் பாதிப்பு தோன்றினால் கதிரின் மேலுள்ள உறைகளை சேதப்படுத்தி கதிரை சேதப்படுத்தும். 20 முதல் 40 நாள் வயதுடைய இளம் பயிர்களையே இவை அதிகம் சேதப்படுத்துகின்றன. பின் காட்டுவகைப் புற்களில் இருந்து சேதத்தை ஏற்படுத்தும்.

  • உணவுப் பயிர்கள் இல்லாத போது கூட்டம் கூட்டமாக மற்ற இடங்களுக்கு பறந்து செல்லும் ஆற்றலுடையவை.

அமெரிக்க படைப்புழு தாக்குதல்

மேலாண்மை (Pest Management)

  • உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழிக்க இயலும்.

  • வயலில் அடியுரமாக எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலம் கூட்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி உருவாவது தடுக்கப்படும்.

  • எக்டருக்கு ஒன்று என்ற அளவில் விளக்குப் பொறிகளை பயன்படுத்தி அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்கானிக்க வேண்டும்.

  • மண்ணின் வளம் மற்றும் ஈரப்பதத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

  • அதிகளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சரியான பயிர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

  • விதை நேர்த்தி செய்வது ஆரம்ப கட்டத்தில் பதிப்பை தவிர்க இயலும்.

  • காலம் தாழ்த்தி பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். பருவம் தாழ்த்தி பயிர் செய்வதால் பாதிப்பு அதிகம் வருவதற்கு வாய்பு உள்ளது. மேலும் பல்வேறு நிலைகளில் மக்காச்சோளம் இருந்தால் புழுக்களுக்கு உணவு கிடைக்துக்கொண்டே இருக்கும்.

  • இதனை தவிர்க்க ஒரு பகுதியில் விவசாயிகள் ஒரே சமயத்தில் பயிர் செய்வது நல்லது. முதல் மழையை உபயோகித்து மக்காச்சோளம் நடுவது படைப்புழுவின் பாதிப்பை குறைக்க இயலும்.

  • நேப்பியர் புல்லை வயலைச்சுற்றிலும் வரப்பு பயிராக நடுவது மூலம் தாய் அந்துப்பூச்சிகளை நேப்பியர் புல்லில் முட்டைகளை வைக்க செய்யலாம்.

  • நேப்பியர் புல்லின் குறைவான சத்து உள்ளதால் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் வளர்ச்சி குறைந்து இறந்துவிடும்.

  • வேலிமசாலை மக்காச்சோளத்தில் ஊடுபயிராக செய்யலாம். வேலிமாசாலில் இருந்து வெளிவரும் திரவங்கள் படைப்பழுவிற்கு உகந்தது அல்ல. மேலும் இவை களைகளையும் குறைக்கின்றது.

  • மக்காச்சோளத்துடன் மரவள்ளி அல்லது பீன்ஸ் போன்ற படைப்புழுவால் அதிகம் விரும்பப்படாத பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

  • குறுகிய கால மக்காச்சோள இரகங்களை பயிரிடுவது படைப்புழுவின் பாதிப்பில் இருந்து தவிர்க்க இயலும்.

  • வயலை சுற்றியும் களைகள் இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் குழுவாக இருக்கும் என்பதால் இந்த சமயத்தில் இவற்றை கட்டுப்படுத்துவது எளிது.

  • முட்டை ஒட்டுண்ணிகள் மற்றும் புழு ஒட்டுண்ணிகள் (போன்றவற்றையும் இப்புழுவின் பாதிப்பை குறைக்கவல்லவை) புள்ளிவண்டுகள் தரைவண்டுகள் மற்றும் பூ பூச்சிகள் (flower bugs) போன்றவை படைப்புழுவை உண்ணும். வயலில் பூக்கும் பயிர்களை பயிரிடுவதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

  • வயலைச் சுற்றியுள்ள வரப்புகள் மற்றும் இதே பகுதிகளில் பயறுவகைப் பயிர்கள் பூக்கும் தாவரங்களை வளர்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரிக்க செய்து படைப்புழுக்களை அழிக்கலாம்.

  • நுண்ணியிர் பூச்சிகெல்லிகளான பவுரியா, பசியானா, மெட்டாரைசியம் அனைசோபிலியே மற்றும் பேசில்லஸ் மற்றும் துரிஞ்சிரியன்சிஸ் போன்றவற்றை உபயேகிப்பதன் மூலம் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.முட்டைகளை குவியலாக இடுவதால் அவற்றை பொருக்கி அழிக்கலாம்.

  • முழங்கால் அளவுள்ள இளம்பயிர்கள் 20 சதவீதம் மற்றும் தோள் உயரமுள்ள வளர்ந்த பயிர்கள் 40 சதவீதம் சேதமும் தென்பட்டால் பின் வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    1.    

    பேசில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ்

    2.0 மிலி,லி

    2.    

    ஸ்பைனோசேட்

    5.0 மிலி,லி

    3.    

    குளோர் ஆன்டிரிநில்ப்ரோல்

    0.3 மிலி,லி

    4.    

    இன்டாக்சாகார்ப்

    1.0 மிலி,லி

    5.    

    ஏமமெக்டின் பென்ஜோயேட்

    0.4 மிலி,லி

    6.    

    அசாடிராக்டின்

    2 மிலி,லி


டாக்டர் கே.சி சிவபாலன் 
வேளாண் ஆலோசகர் – திருச்சி


மேலும் படிக்க ... 


மரங்களை தாக்கும் நோய்களும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!

முருங்கையை தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!

English Summary: Attack Symptoms and Management of Fall armyworm Published on: 27 July 2020, 06:14 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.