Horticulture

Monday, 06 July 2020 03:39 PM , by: Elavarse Sivakumar

Image credit : Gardening Tips

பச்சை பச்சேல் எனக் காட்சியளிக்கும் கொத்தவரங்கயாய், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் வரப்பிரசாதங்களில் ஒன்றாகும்.

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி ஆயியவை நிறைந்துள்ள கொத்தவரங்காய், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. எப்போதுமே மற்றக் காய்கறிகளை விடக் குறைவான விலைக்கு விற்கப்படும் கொத்தவரையை, இன்றும் கிராமங்களில் வத்தல் செய்வது உண்டு.

கொத்தவரங்காயை உப்பிட்டு அவித்த வெயிலில் காயவைத்து வத்தலாக்கி, சேமித்து வைத்துக்கொள்வார்கள். இதனை அப்படியேக் குழம்பிலும் போடலாம். எண்ணெயில் வறுத்தும் சாப்பிடலாம். வத்தக் குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

ரகங்கள்

இதில் பூசா சதாபகர், பூசா மவுசாமி, பூசா நவுபகார், கோமா மஞ்சரி என பல்வேறு ரகங்கள் உள்ளன.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான இடத்தில் வளரும். அல்லது வண்டல் மண்ணின் காரத்தன்மை 7.5-8.0 வரை இருத்தல் வேண்டும். உவர்ப்பு நிலங்களிலும் கொத்தவரங்காய் நன்கு வளரும் தன்மையுடையது.
விதைப்பு மற்றும் பருவம்

ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் விதைகளைப், பக்கவாட்டில் 15 செ.மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதைகளை விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி

ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவைக் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன்பு சுமார் 15 - 30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்பட செய்வது அவசியம். பின் பார் சால்களை 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும்.

Image credit : Eco secretz

ஊட்டச்சத்து நிர்வாகம்

கடைசி உழவின் போது ஒரு ஹெக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 50 கிலோ மற்றும் சாம்பல் சத்து 25 கிலோவை அடியுரமாக இடவேண்டும்.

நடவு செய்த 30-வது நாளில் ஒரு ஹெக்டருக்கு 20 கிலோ தழைச் சத்தினை மேல் உரமாக இடவேண்டியது அவசியம்.

பயிர்ப்பாதுகாப்பு

  • இலை தத்துப்பூச்சி தாக்கம் ஏற்பட்டால், மீத்தைல் டெமட்டான் 25 இசி 1 மில்லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 1 மிலி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

  • காய்ப்புழுத் தாக்கினால், காரரைல் 2 கிராம் அல்லது என்டோசல்பான் 2 மிலி என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் மேலாண்மை

  • இலைப்புள்ளி நோய் உருவானால்,மேங்கோசிப் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

  • சாம்பல் நோய் தாக்கத்தைத் தடுக்க 15 நாட்களுக்கு ஒருமுறை நனையும் கந்தகத் தூள் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மகசூல் விதைத்த 90-வது நாளில் 7 – 10 டன் மகசூல் கிடைக்கும்.

கொத்தவரங்காயின் நன்மைகள்

கிளைகோநியூட்ரியன்ட் (Glyconutrient) என்னும் வேதிப்பொருள் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
கொத்தவரை இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை.

கொத்தவரையை கர்பிணிகள் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இதில் இடம்பெற்றுள்ள இரும்புச்சுத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு ஆகியவை சீராக வளர்ச்சி அடைய உதவுகிறது.மிககுறைந்த கலோரி உணவாக இருப்பதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலன் அளிக்கும்.

மேலும் படிக்க

கொரோனா காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை விடுகளில் சுத்தம் செய்வது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்

குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)