மாடித்தோட்டம் என்பது நமது மொட்டை மாடியில், நமக்கு பலன்தரக்கூடிய செடிகளை வளர்ப்பது ஆகும். மேலும் பலர், இதனை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். இதில் காய்கறி, கீரைகள், சில வகைப் பழச்செடிகள், மலர்ச்செடிகள், மூலிகைச் செடிகள், அழகு தாவரங்கள் ஆகியவற்றை வளர்த்து வருவது குறிப்பிடதக்கது. அந்த வகையில், அவ் வகைப் பயிர்களை பாதுகாக்க சரியான முறையை கையாளுவது, நன்மை பயக்கும்.
பயிர் பாதுகாப்பு:
மொட்டை மாடியில் செடிகள் வளர்க்கும்பட்சத்தில் சில வகையான பூச்சிகள் மற்றும் நோய்கள் பயிரைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும், வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பூச்சி நோய் பாதிப்புக்குள்ளான செடிகள் குன்றிய வளர்ச்சி, இலைகள் சுருங்குதல், மஞ்சள் நிற இலைகள், பழுப்புநிற புள்ளிகள், வாடல், பூ மற்றும் பிஞ்சு உதிர்தல் உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது.
அவ்வாறு தென்படும்பட்சத்தில் பிரச்னை என்னவென்பதை அறிந்து தக்க பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டியது, அவசியமாகும். மேலும், பூச்சிகளைப் பொறுத்தவகையில், மாவுப்பூச்சி, அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, செதில் பூச்சி ஆகிய சாறு உறிஞ்சக்கூடிய பூச்சிகளும், காய்புழு போன்ற புழுக்களும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது.
மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த சிகைக்காய் காய்களை 1 லிட்டர் நீரில் 50 கிராம் என்ற அளவில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி செடிகளின் மீது தெளித்து வர நல்ல தீர்வாக அமையும். அசுவினிப் பூச்சி, பேன் பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை 50 கிராம் அளவில் நன்கு அரைத்து, 1 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டிய பின்னர், செடிகளின் மீது தெளிக்கலாம். செடிகளில் வரும் எறும்புகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் பொடியை நல்ல நிவாரணியாக செயல்படும், எனவே அதனை நீரில் கலந்தும் தெளிக்கலாம்.
வெள்ளை ஈ, தத்துப்பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்த வேப்பம்கொட்டையை இடித்து நீரில் ஊற வைத்து அக்கரைசலை வடிகட்டியும் தெளிக்கலாம். அல்லது, வேப்ப எண்ணெயை நீரில் கலந்து தெளிப்பதும் சிறப்பான வழியாகும். வேப்ப எண்ணெய் நீரில் கலப்பதற்கு காதி சோப்புக் கரைசலை அதனுடன் சேர்த்துக் கொண்டால், கூடுதல் நன்மை கிடைக்கும். புழுக்கள் தென்படும் பட்சத்தில் அவற்றை கைகளாலேயே நசுக்கி அழித்து விடுவது நல்லது. வேப்பம் எண்ணெய் பயன்படுத்தியும் புழுக்களை கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடதக்கது.
நோய்களைப் பொருத்தமட்டில், சாம்பல் நோய், இலைப்புள்ளி, வேரழுகல், கழுத்தழுகல், வாடல் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபாயம் உள்ளது. முறையான ஊட்டச்சத்து நிர்வாகம், போதிய அளவு சூரிய ஒளி, தூய்மையான தோட்டிகளைப் பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இலைகளில் தோன்றக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த வசம்பு 1 லிட்டர் நீருக்கு 50 கிராம் அளவில் இரவு முழுவதும் ஊறவைத்து வடிகட்டி அக்கரைசலைத் தெளித்து வருவது நன்மை பயக்கும். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த சீகைக்காய் காய்களை 1 லிட்டர் நீருக்கு 50 கிராம் என்ற அளவில் ஊறவைத்து, வடிகட்டிய நீரை செடிகளின் வேர்பாகம் நனையுமாறு ஊற்ற வேண்டும். இவ்வழிகள், மாடித்தோட்டம், முற்றத்தில் தோட்டம் வைத்திருப்பவர்கள் என அனைவருக்கும் பயன்படும்.
தமிழகம்: தென் சென்னையில் மே 11ம் தேதி மேட்ரோவாட்டர் சேவை தடைபடும்
நீர்ப்பாசனம் முறை:
மழைக்காலம் தவிர்த்து, இதர நாள்களில் தினந்தோறும் செடிகளுக்கு நீரூற்றுவது அவசியமாகும். பூவாளி கொண்டோ, குவளை கொண்டோ செடிகளின் வளர்ச்சிப் பருவத்திற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது கட்டாயமாகும்.
மேலும் படிக்க:
அமுதம் திட்டத்தை துவக்கி வைத்தார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்