பயிர் நன்கு வளர்ந்து அமோக மகசூலை அளிக்க எத்தனைக் காரணிகள் துணை நிற்கின்றனவோ,அதற்கு ஏற்ப வளர்ச்சிகையத் தடுக்கும் காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் கண்காணித்து அதற்கு ஏற்றபடிப் பயிர்களைப் பராமரிப்பது, பாதிக்கும் மேற்பட்ட இழப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
பனி
அப்படி, பயிரின் வளர்ச்சிக்குத் தடையோடும் காரணிகளில் பனியும் ஒன்று. தை பனி தரையும் குளிரும் மாசி பனி மச்சும் குளிரும் என்பது பழமொழி.
இந்த மாதங்களில் பனியின் தாக்கத்தால் செடிகள் உறக்க நிலைக்கு செல்லும்.
தொட்டியில் வளர்க்கும் செடிகளை அவ்வப்போது இளம் வெயில் பாடுமாறு மாற்றி வைக்க வேண்டும். மனிதர்கள் போலவே தாவரங்களும் பனி, குளிர், வெப்பம், வறட்சியை தாங்கும் தன்மைப் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நோய்த் தாக்குதல்
பனித்துளிகள் இலையின்போதுவிழுவதன் போது இளந்தளிர் இலைகள் வாடி கருகல் நோய் தாக்குதல் காணப்படும்.
பனியால் எற்படும் பிராஸ்ட் இன்ஜுரி இருந்து செடிகளை காப்பாற்ற சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். குளிர் காலத்தில் செடிகளில் இருக்கும் வாடிய இலைகள், காய்ந்துபோன தட்டுகள், பழுத்த இலைகள் போன்றவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
மண் ஈரப்பதம் (Soil moisture)
இவ்வாறாகச் செய்வதால் நோய் தொற்றில் இருந்துச் செடிகளை காப்பாற்றமுடியும்.தொடர்ந்து மழை பெய்யவதால் மண் ஈரத்துடன் இறுக்கமான நிலையில் இருக்கும்.
அப்போது, களைக்கொத்தியால் நன்றாகக் கிளறி விட வேண்டும். இப்படிச் செய்வதால் மண்ணில் காற்றோட்டம் ஏற்படும். செடிகள் தளர்ந்த நிலையில் இருந்தால் 19.19.19 என்ற கூட்டு உரத்தை 1கிராம்/,1,லிட்டர் தண்ணீர்
கலந்து இலைவழி தெளிப்பு செய்ய வேண்டும். மீன் அமிலம்,பஞ்சகாவியா போன்றவற்றைத் தெளிக்கலாம்.
பனியின் தாக்கத்தை வேர்பகுதியில் படாதவாறு காய்ந்துபோன இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு போட
வேண்டும்.
பூச்சிக் கொல்லி (Insecticide)
பூச்சிகள் தொந்தரவு இருந்தால் வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும். தண்ணீர் வேர்பாகத்தில் தேங்காதவாறுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம், இந்தப் பனி காலத்தில் செடிகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!
நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!