1. தோட்டக்கலை

பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Insecticide bees - Scientists have changed their minds!

தோட்டத்து தேவதைகள் என வருணிக்கப்படும் தேனீக்கள், விவசாயத்திற்குச் செய்யும் நன்மைகள் ஏராளம்.

மகசூல் அதிகரிக்கும் (Yield will increase)

ஒரு விவசாயிகள் தேனீ வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுவதன் மூலம், அதாவது தனது தோட்டத்தில் தேனீப் பெட்டி வைத்து தேனீ வளர்க்க முற்பட்டால், மகசூல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள்.

அந்த அளவுக்கு மண்ணுக்கும், மண்ணில் பயிர்விக்கப்படும் பயிருக்கும் உற்றத் தோழனாகத் திகழும் தேனீக்கள், பயிர் வளர்ச்சிக்காக அடிக்கப்படும்,
மருத்துகளின் நச்சுத்தன்மைக்கு ஆளாகி பலியாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நம் நாட்டில்.

பீவெக்டார் டெக்னாலஜி

ஆனால் கனடாவில் நிலைமையே வேற.அப்படி என்ன வித்தியாசம்?என்று பார்த்தால், அது முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில், தேனீக்களைக் கொண்டே இயற்கைப் பூச்சி மருந்துகளைப் பயிர்களின் மேல் தெளிக்க முடியும் என்ற 'பீ வெக்டார் டெக்னாலஜியை கனடா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.பயிர்களுக்கு நடுவே தேன் சேகரிக்க வும், மகரந்த சேர்க்கைக்காகவும் வைக்கப்படும் தேனீப் பெட்டிகளைத் தந்திரமாக விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.

பூஞ்சை உருவாகாது

தேனீக்கள் வந்து செல்வதற்காக பெட் டியில் இருக்கும் துளையில் இயற்கை பூஞ்சைக் கொல்லி மருந்தை வைத்து விட்டால், அதை தேனீக்கள் உடலில் பூசியபடி பறந்து செல்லும்.அவை தேன் பருக பயிர்களின் பூக்களின் மேல் அமர்கையில், இயற்கை பூஞ்சைக் கொல்லித் துகள்கள் உதிர்ந்து பூசிக்கொள்ளும். இதனால் பயிரின் பூக்களில் பூஞ்சை உருவாகாமல் தடுக்கப்படும்.

இதே முறையில் தேனீக்களுக்குக் கேடு விளைவிக்காத, வேறு வகை இயற்கைப் பூச்சி மருந்துப் பொடிகளையும் கலந்து தேன் கூட்டு வாயிலில் வைக்க முடியும்.
பூச்சி மருந்துகளை பொதுவாக பயிர்கள், செடி கொடிகளின் எல்லா பகுதியின் மீதும் தெளிப்பது தான் நடைமுறை.

இதனால் தாவரம் முழுதும் நச்சுச் தன்மை படுவதோடு, விவசாயிகளுக்கு இடுபொருள் செலவும் விரயமாகிறது.ஆனால், தேனீக்கள் பூக்கள் மீது மட்டுமே அமரக்கூடியவை. இதனால் விளைச்சலுக்கு எது தேவையோ மீது மட்டும் பூச்சி மற்றும் பஞ்சானக் கொல்லிகளைத் தேனீக்களால் செலுத்த முடியும்.

செலவு குறையும் (The cost will go down)

தற்போது சோதனையில் இருக்கும் தேனீ மருந்து தெளிப்பு தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரலாம் என நம்புவோம். அப்படி வந்துவிட்டால், செலவும் குறைவு. மகசூலும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க...

 

English Summary: Insecticide bees - Scientists have changed their minds! Published on: 03 December 2021, 06:55 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.