Horticulture

Friday, 06 November 2020 09:28 AM , by: Elavarse Sivakumar

வடகிழக்கு பருவமழையின்போது (North East Monsoon) காய்கறி விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத்துறை யோசனை தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், இதுகுறித்து உதகை தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

  • நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை காலத்தில் காய்கறி பயிர்கள், பல்லாண்டு பயிர்கள் மற்றும் பசுமை குடில் நிழல்வலை கூடாரம் அமைத்து உள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

  • பசுமைக்குடிலின் அடிப்பாகம் பலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

    உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.

  • பட்டுப்போன காய்ந்து போன மரங்கள் மற்றும் கிளைகள் பசுமைக்குடிலை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுதல் மிக அவசியம்.

  • பசுமை குடிலின் கட்டுமானத்தில் உள்ள கிளிப்புகளை மாற்ற வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமை குடிலை சுற்றி உயிர் வேலி அமைக்க வேண்டும்.

  • பல்லாண்டு பயிர்களான மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், கொக்கோ போன்றவற்றுக்கு பூஞ்சாண நோய்களை தடுக்க சூடோமோனஸ் தெளித்துப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

  • காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றுவ துடன், வாழை, காய்கறிகள், பந்தல் காய்கறிகள், பூக்கள் போன்ற வற்றுக்கு நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும்.

  • டிரைக்கோ டெர்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும்.

  • சூடோமோனஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியை இலையில் தெளிக்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)