குளிர்காலத்தில் மல்லிகை செடிகளில் களை மேலாண்மை செய்து மல்லிகைப்பூ உற்பத்தியினை அதிகரித்து பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங் கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் முனைவர் சீ. கிருஷ்ணகுமார், முனைவர் மு.பழனிக்குமார் ஆகியோர் தெரிவித்ததாவது:
மதுரை மாவட்டத்தில் மல்லிகை சாகுபடி பரவலாக எல்லா வட்டாரங்களிலும் சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவு பயிரிடப்பட்டு வருகின்றது.குறிப்பாக திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி வட்டாரங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது.
பொதுவாக மல்லிகை உற்பத்தி பிப்ரவரி மாதம் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நிறைவடையும். இக்காலங்களில் மல்லிகை பூ வரத்து அதிகமாக இருப்பதால் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த அளவே விலை கிடைக்கப்பெற்று வருவாய் இழப்பை எதிர்கொள்கின்றனர்.
எனவே குளிர்காலத்திற்கு முன்பாக மல்லிகை செடிகளை கவாத்து செய்து, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தால் மல்லிகை பூ உற்பத்தியை அதிகரிக்கலாம். குளிர் காலங்களில் மல்லிகை பூ விலையானது மும்மடங்கு அதிகரிப்பதால் விவசாயிகள் அதிக இலாபம் ஈட்டுவதற்கு வழிவகை செய்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
செரிமானப் பிரச்னை தீர சீரகம்- அக்டோபர் மாதத்தில் பயிரிட சிறந்த மருத்துவ மூலிகை!
இயற்கை உரத்தில் உள்ள சத்துக்கள் சதவீதம் தெரியுமா? விபரம் உள்ளே!