Krishi Jagran Tamil
Menu Close Menu

இயற்கை முறையில் அவரை சாகுபடிக்கு மானியம் - வேளாண்துறை அறிவிப்பு!

Wednesday, 14 October 2020 09:24 PM , by: Elavarse Sivakumar
Subsidy for cultivation of beans in a natural way - Department of Agriculture announcement!

உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மையைக் குறைக்க ஏதுவாக, இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் அதிகரிப்பதற்காக, தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சு.ஜெயபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

அங்கக முறையில் தென்காசி மாவட்டத்தில் காய்கனி (Vegetable) சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் கீரை வகை பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ,2,500ம், வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடிவகை பயிா்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,750ம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கூடுதலாக இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் தோட்டக்கலை விவசாயிகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்பட்டு, அங்கக விவசாய திட்டத்தில் பதிவு செய்ய ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியம் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் தங்களது நிலப் பட்டா, ஆதாா் அட்டை, நில வரைபடம், பயிா் சாகுபடி திட்ட விவரங்கள், நீா், மண் பரிசோதனை செய்த அறிக்கைகளோடு தங்களது வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி அங்கக வேளாண்மைத் துறையில் பதிவு செய்து உறுப்பினராகி பயன் பெறலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்!

காய்கறி விதை உற்பத்திக்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

இயற்கை முறையில் சாகுபடி அவரை, கத்திரி, வெண்டைக்கு மானியம் தக்காளிக்கும் மானியம் Subsidy for cultivation of beans in a natural way Department of Agriculture announcement!
English Summary: Subsidy for cultivation of beans in a natural way - Department of Agriculture announcement!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. சமைக்காமலே சாதமாக மாறும் "மேஜிக் ரைஸ்" குறித்து தெரியுமா உங்களுக்கு?
  2. நிவாரணம் கோரி 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம்- பி.ஆர். பாண்டியன் தகவல்!
  3. கால்நடை விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை - 41லட்சம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்!
  4. விடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்!
  5. செயல்படத் தொடங்கியது பள்ளிகள்! - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை!
  6. எந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..! - விவசாயிகள் திட்டவட்டம்!
  7. விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!
  8. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
  9. பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!
  10. LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.