Horticulture

Friday, 18 September 2020 11:21 AM , by: Elavarse Sivakumar

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என கடலூர் மாவட்ட வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து கடலூர் மாவட்டத்தின், அண்ணாகிராமம் தோட்டக்கலை உதவி இயக்குநர் லோ.நாகநந்தினி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கத்திரி, வெண்டை, புடலங்காய், பீர்க்கன், பூசணி, பரங்கி, சுரை பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.2,500 வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

Credit : Kingpng

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள்,

  • விதை அல்லது நடவு செடிகளை சாகுபடி செய்வதற்காக கொள்முதல் செய்த விலைப்பட்டியல்,

  • கிராம நிர்வாக அலுவலர் அளித்த அடங்கல்,

  • சிட்டா

  • குடும்ப அட்டை நகல்

  • ஆதார் அட்டை நகல்

  • வங்கிப் புத்தக நகல்

  • சிறிய புகைப்படம்-2

  • ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.ஒரு விவசாயிக்கு சாகுபடி செய்த பரப்பின் அடிப்படையில் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களை அறிய தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)