விவசாயம் என்றாலே அதில் நீர் மேலாண்மை என்பது ஒரு கலையாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் நீர் அதிகரிப்பது நல்லது அல்ல. குறைவதும் சிக்கலுக்கே வழிவகுக்கும்.
நீர் மேலாண்மை (Water management)
அந்த வகையில், நெல் சாகுபடி செய்யும்போது, நீர் மேலாண்மை செய்ய வேண்டிய மிகவும் இன்றியமையாதது, என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருந்திய நெல் சாகுபடி
தற்போது பொதுவாக எல்லா இடங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது.
சாதாரண நெல் சாகுபடியை விட திருந்திய நெல் சாகுபடியில் 50% நீர் பாய்ச்சல் குறைகிறது.
சம்பா பட்டத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிரில் அதிக அளவு நீர் தேங்கியுள்ளது. அவற்றைப் பார்வையிட்டுப் பக்குவமாக, வடித்து விட வேண்டும்.
அதிகளவு நீர் தேங்கினால் (If too much water stagnates)
-
நெல் பயிருக்கு நீர் பாய்ச்சலும் காய்ச்சலுமாக இருக்க வேண்டும்.
அதிகளவு நீர் தேங்குவதால பயிரின் வளர்ச்சி குன்றும், நெல் பயிர் சாய்ந்துவிடும்.
-
பயிர்க்கு சரியான அளவு சத்துக்கிடைக்காது. வேர் வளர்ச்சியும் நாளுக்கு நாள் குறைய ஆரம்பிக்கும்.
-
காற்றோட்டமும் முழுமையாகத் தடைபடும் நிலை ஏற்படும்.
பயிருக்குக் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவும் படிப்படியாகக் குறையும்.
-
நீர் மறைய நீர் கட்டுவதால் நிறைய வரும் நெல் கட்டு என்ற பழமொழிக்கேற்ப நீர்பாசனத்தை பின்பற்ற வேண்டும்.
-
இதனால், பாசன நீரில் உர சதவீதம் குறைகிறது.
-
குறைந்த அளவு நீர் பாய்ச்சுவதால் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதிக தூர் கட்டுவதுடன், அதிக மணி பிடிக்கவும் வாய்ப்பு உருவாகிறது.
-
எனவே விவசாயிகள், நீர்ப்பாசனத்தில் மிக முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
-
தண்ணீர் இருக்கிறது என்பதற்காக அதிகளவு தண்ணீர் விடக்கூடாது.
நீர் பட்டும் படாமல்
எனவே, உரமிடும் தருணத்திலும் பூச்சி மருந்து தெளிக்கும் சமயத்திலும் வயலில் நீர் பட்டும்படாமலும் இருக்க வேண்டும்.
கரையான் தொந்தரவு உள்ள இடங்களில் இடங்களில் அதிக அளவு காய்ந்து போன நிலை இருக்கக்கூடாது.
தகவல்
அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில்- அதிரடியாக அறிவித்த அமைச்சர்!
கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!