விவசாயிகள் மாவட்ட சம்பா நெல் சாகுபடியில் வரப்பில் உளுந்து சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சாதகமாகும் சம்பா (The advantage is samba)
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடப்பு வருடம் காலநிலை சாதகமாக உள்ளதாலும் தற்பொழுது வரை கிடைக்கப் பெற்ற மழை, திருப்திகரமாக உள்ளதாலும் சம்பா சாகுபடி அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி, இயந்திர நெல் சாகுபடி, நேரடி நெல் விதைப்பு மற்றும் உருளும் விதைக்கும் கருவி ஆகியனக் கொண்டு தீவிரமாக சம்பா நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தருணத்தில் விவசாயிகள் வரப்பில் உளுந்து சாகுபடி செய்வது கூடுதல் வருமானத்திற்கு வழிவகை செய்யும் என அறிவுறுத்தப்படுகிறது.
வரப்பு சாகுபடி
-
பயறு வகை பயிர்களின் வேர் முடிச்சுகள் மூலம் வளிமண்டல தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்துகின்றன. இதனால் மண்வளம் மேம்படும்.
-
வரப்பு தூய்மையாகக் களைகள் இல்லாமல் பராமிக்கப்படுவதால் களைகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
-
சாகுபடி செலவில்லாமல் வீட்டுக்குத் தேவையான பயறு வகைகளை உளுந்து, துவரை மற்றும் தட்டைப்பயறு கிடைக்கின்றது. இதனால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
நன்மைகள் (Benefits)
-
வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் 13 பங்கு உயரத்தில் பயறுவகை விதைகளை விதைக்க வேண்டும்.
-
தட்டைப்பயறு, உளுந்து, துவரை ஆகியப் பயிர்கள் விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும்.
-
வரப்பில் உளுந்து மற்றும் தட்டைப்பயறு போன்ற பயறுவகை பயிர்களான வரப்பு பயிராக சாகுபடி செய்யும்போது, இவற்றில் நெற்பயிரினை தாக்காத அசுவிணிகள் தோன்றும்.
-
இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும்.
-
இப்பொறி வண்டுகள் நெற்பயிரினைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைத் தாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தும்.
-
மேலும் இந்த பயறு வகை பயிர்களில் மஞ்சள் போன்ற வண்ண மலர்களால் ஊண் உண்ணிகன் போன்ற பல்வேறு குளவி இனங்கள் கவரப்படும்.
பல்கிப் பெருக வாய்ப்பு
குறிப்பாக நெற்பயிரினைத் தாக்கும் தண்டு துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு ஆகியவற்றினைக் கட்டுப்படுத்திட உதவும் டிரைக்கோகிரம்மா போன்ற முட்டை ஒட்டுண்ணிகள் மற்றும் தாய்ப் பூச்சிகளுக்கு, இப்பூக்களில் உள்ள தேன் நல்ல உணவாக அமைவதால் அவைகள் பல்கிப் பெருக வாய்ப்பு உருவாகிறது.
இதனால் நெற்பயிரினைத் தாக்கும் பூச்சி மற்றும் புழு இவைகளை கட்டுப்படுத்தும் இயற்கை எதிரிகளை ஊக்கு வித்திடும் வகையில் இந்த வரப்பு பயிர்கள் பயன்படுகின்றன. மேலும் அதிலிருந்து கிடைக்கும் பயறு வகைகள் உபரி வருமானமாக விவசாயிகளுக்கு கிடைக்கும்.
எனவே, விவசாயிகள் பயறுவகைப் ப யிர்களை வரப்பில் சாகுபடி செய்வதன் மூலம் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேற்கொண்டு பயன் பெறலாம்.
தகவல்
இராம.சிவகுமார்
வேளாண்மை இணை இயக்குநர்
புதுக்கோட்டை மாவட்டம்
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் உயிர் உரங்கள்!
3 நாட்களில் 2.37 லட்சம் மரக்கன்றுகள்- நடவு செய்த விவசாயிகள்!