தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மார்கழிப் பட்டத்தில்,நிலக்கடலை சாகுபடியை மேற்கொள்வதன் மூலம் அதிக மகசூலைப் பெறமுடியும்.குறிப்பாக சிலப் புதியத் தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டமுடியும்.
அதிக மகசூல் பெறுவ தற்கான வழிமுறைகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
அதிக மகசூல் (High yield)
மார்கழிப் பட்டத்தில் நிலக்கடலை விதைக்கும் பொழுது, போதிய மழை, சரியான தட்ப வெப்ப நிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது.
நன்கு திரட்சியான தூய்மை மற்றும் நடுத்தர பருமனுள்ள 96 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஈரப்பதம் (Moisture)
பிற ரக விதைகளின் கலப்பு நிச்சயம் இருக்கக்கூடாது. பூச்சி பூஞ்சாண நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். தரமான விதைகள் குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்பு திறனும், அதிகபட்ச ஈரப்பதம் 9 சதவீதமும் இருக்க வேண்டும்.
விதை நேர்த்தி (Seed treatment)
மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இளஞ்செடி பாதிக்கப்பட்டு பயிர்களின் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
தவிர்க்க விதைகளின் மூலம் பரவும் பூஞ்சான நோய்களைத் தடுக்க நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத் திற்கு முன்பாக ஒரு கிலோ விதை உடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்துப் பயிருக்கு கிடைக்கச் செய்ய, விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ரைசோபியம் 2 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா 2 பாக்கெட் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து உயிர் உர விதை நேர்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
80 கிலோ விதைகள் (80 kg of seeds)
-
நிலக்கடலைப் பயிரில் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானது. நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும்.
-
விதை களை 30 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணிக்கையை மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
-
பொக்கு காய்கள் உருவாவதைப் போக்க, நிலக்கடலை நுண்ணூட்டச் சத்து 5 கிலோ, 2 கிலோ மணலுடன் கலந்து வயல் பரப்பின் மேல் தூவ வேண்டும்.
சத்துக்கள்
விதைத்த 40 முதல் 45 வது நாளில் 80 கிலோ மண்ணைக் கொத்தி ஜிப்சத்தை இட்டு அணைக்க வேண்டும். இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்து அதிக எண்ணெய்ச் சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிகளவில் உருவாக உதவுகிறது.
தகவல்
செல்வநாயகம்
உதவி இயக்குனர்
தஞ்சாவூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை
மேலும் படிக்க...
பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!
நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!