புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நானோ யூரியா திரவமானது அதிக ஊட்டச்சத்து பயன்பாட்டு திறன் கொண்டது. இது பயிர் உற்பத்தியை அதிகரிக்கும். அதோடு, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) தெரிவித்து இருக்கிறது.
நானோ யூரியா ஆலையானது IFFCO ஆல் விவசாயிகளுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள கலோல் நகருக்கு அருகே IFFCO மூலம் உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
"நானோ யூரியா அதிக ஊட்டச்சத்து பயன்பாட்டு திறன் கொண்டது. மேலும், மண், நீர் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நானோ யூரியா திரவத்தைப் பயன்படுத்துவது விவசாயிகளின் வருமானத்தில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதோடு, இது தளவாடங்கள் மற்றும் கிடங்கு செலவைக் கணிசமாகக் குறைக்கும்" என்று IFFCO தெரிவித்துள்ளது.
மண்ணில் யூரியாவின் பயன்பாட்டைக் குறைக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் இருந்து நானோ யூரியாவைத் தயாரிப்பதற்கான உத்வேகம் கிடைத்தது. சிறந்த முடிவுகளுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்தி தாவரங்களில் திரவ உரம் தெளிக்கப்படும் என்று இஃப்கோவின் (IFFCO) நிர்வாக இயக்குநர் டாக்டர் யு எஸ் அவஸ்தி தெரிவித்து இருக்கிறார்.
நானோ யூரியா திரவமானது பயிர்களின் ஊட்டச்சத்து தரம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலின் தரத்தில் பெரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இஃப்கோவால் தயாரிக்கப்பட்ட 3.60 கோடி நானோ யூரியா திரவ பாட்டில்களில், கிட்டத்தட்ட 2.50 கோடி பாட்டில்கள் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன" என்பது குறிப்பிடத்தக்கது.
நானோ யூரியா திரவ ஆலையானது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும், உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும் நானோ யூரியா திரவம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பிற்குரியது.
மேலும் படிக்க
இனி மலிவான விலையில் யூரியா கிடைக்கும்! எப்படி பெறுவது? விவரம் உள்ளே.!