கொரோனாவால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு காரணமாக மலர்களும் பலியாகும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வியாபாரிகளும் வியாபாரத்திற்குச் செல்ல முடியாமல் மனவேதனை அடைந்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
கொரோனாப் பரவல் 2-வது அலையின் வேகம் தீவிரமாக இருப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
24ம் தேதி வரை ஊரடங்கு (Curfew until the 24th)
இதனால் தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்படவும் அனுமதி இல்லை.
பறிக்கப்படாத மலர்கள் (Flowers not plucked)
இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த காவனூர் நரசிங்கபுரமத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, முல்லை, கனகாம்பரம், பன்னீர் ரோஜா, கலர் காக்டா, மூக்குத்தி ரோஸ், நந்திவட்டான், சம்பங்கி ஆகிய பூக்கள் பறிக்காமல் செடியிலேயே உதிர்ந்தும், அழுகியும் வீணாகின்றன.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வெளியூர் விற்பனை இல்லை (No out-of-town sales)
காவனூர் நரசிங்கப்புரத்தில் உற்பத்தியாகும் பூக்கள் இங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கும், காஞ்சிபுரம் மார்க்கெட்டுக்கும் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வோம். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் பூக்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.
உள்ளூர் விற்பனைக்கும் தடை (Ban on local sales)
பூச் செடி நட்ட கூலிக்கும், பூ பறிக்கும் கூலிக்காவது வரட்டும் என்று பறித்து உள்ளூரில் பைக்குகளில் விற்பனை செய்து வந்தோம். இப்போது அதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். தெருக்களிலும் பூ வியாபாரம் செய்யக்கூடாது என்று தடுத்து அபராதம் விதிக்கின்றனர்.
அடிமாட்டு விலை (The price of slavery)
சென்னை, காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்ய முடியாமல் போனதால் மல்லிகை பூ கிலோ 30 ரூபாய்க்கும், முல்லை ஒரு சேர் 5 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்தோம்.
பலியாகும் மலர்கள் (Sacrificial flowers)
இப்போது உள்ளூரில் விற்பதற்கு அனுமதி மறுப்பதால் எதற்குப் பறிக்க வேண்டும் என்று செடியிலேயே விட்டுவிடுவதால் பூக்கள் உதிர்ந்தும், அழுகியும் வீணாகிறது.
எனவே காய்கறிக் கடைகளுக்குக் காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி தந்து இருப்பது போல் பூ விற்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு பூ விவசாயிகள் மன வேதனையுடன் கூறினர்.
பிற மாவட்டங்களிலும் (In other districts as well)
ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இதுபோல் ஏக்கர் கணக்கில் பூச்செடிகள் பயிரிட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!