ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த இணையவழிப் பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையத்திம் சார்பில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் (Pest control)
விவசாயத்தைப் பொருத்த வரை, சவாலான பல விஷயங்கள் இருந்தாலும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது சற்று கடினமானது. இதில் வெற்றிபெற வேண்டுமானால், எந்தப் பருவத்தில், எவ்விதப் பூச்சித் தாக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றபடி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிமுறைகளைக் கையாள்வது சிறப்பு.
இதன் மூலம் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்.
இணையவழிப் பயிற்சி (Online training)
இதனைக் கருத்தில்கொண்டு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த இணையவழிப் பயிற்சி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று காலை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில், அனைத்து விவசாயிகளும் இணையதளம் மூலம் கலந்துகொள்ளலாம்.
நடைபெறும் நாள் (The day of the event)
இன்று (ஜூன் 14)
பயிற்சி நேரம் (Training time)
காலை 10.45 மணி முதல் பகல்1.30 மணி வரை
விவாதிக்கப்படும் தலைப்புகள் (Topics discussed)
இந்தக் கருத்தரங்கத்தில் நெல் மற்றும் பயிறு வகைகளில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, இயற்கை வழி சார்ந்த வனவிலங்குகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், காய்கறிப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உள்ளிட்டவை குறித்து, மிகத் தெளிவாக விளக்கப்பட உள்ளது.
விஞ்ஞானிகள் பங்கேற்பு (Participation of scientists)
இதில் MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர். பி.அழகேசன் துவக்க உரையும், கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகனசுந்தரம் சிறப்புரையும் ஆற்றுகின்றனர்.
விருப்பமுள்ளவர்கள் இணையம் மூலம் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டுப் பயனடையலாம்.
Join with Zoom Meeting
கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd0FaT1JGZz09#success
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF
தொடர்புக்கு (Contact)
கூடுதல் விவரங்களுக்கு பயிர்பாதுகாப்பு விஞ்ஞானி திரு. ஆர்.டி.சீனிவாசன் அவர்களை 9444585699 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இணைந்து ஏற்பாடு (Arranged together)
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் , MYRADA வேளாண் அறிவியல் நிலையமும், இணைந்து இந்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!
கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!