1. விவசாய தகவல்கள்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Hydrocarbon project never gets approval - CM Stalin assures!

Credit : Tamil Samayam

புதுக்கோட்டையில் வடதெரு கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

நெற்களஞ்சியம் (Oatmeal)

தொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது.

அரசு உறுதி (Government confirmed)

சோழ நாடு சோறுடைத்து" என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று. இத்தனைப் பெருமை கொண்ட காவிரிப் பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு (Opening of water for irrigation)

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தற்போதுத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி, அப்பணிகளைத் துரிதப்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

ஏலம் விட முடிவு (Decide rather than bid)

இந்நிலையில் நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களை செயல்படுத்த ஏலம் விடுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இம்மாதம் 10ம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வடதெரு சேர்ப்பு (North Street Addition)

அந்த அறிக்கையில், காவிரி படுகை பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டு உள்ளது.

வாழ்வாதாரம் சிதையும் (Livelihoods will disintegrate)

ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரி படுகை பகுதியில் உள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும்.

அரசின் கொள்கை (Government policy)

இந்தப் படுகை மற்றும் அதுனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்யும் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்க கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை.

நீக்க வேண்டும் (Has to be removed)

மேற்குறிப்பிட்ட ஏலத்தில் இருந்து வடதெருப் பகுதியை நீக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தமிழகத்தின் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது எனப் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளேன்.

அரசு அனுமதிக்காது (The government will not allow it)

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளைத் தமிழக அரசு ஒரு போதும் வழங்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க...

3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!

கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Hydrocarbon project never gets approval - CM Stalin assures!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.