விவசாயிகளுக்கு உர மூட்டையில் உள்ள விலைக்கே உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
20,000 மெட்ரிக் டன்
தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு 9,500 மெ.டன், பொட்டாஷ் உரத்தை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. தற்சமயம் நிலவி வரும் பொட்டாஷ் உர தேவையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தில் இருந்து 20,000 மெட்ரிக் டன் கூடுதலாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி, இதுநாள் வரை 840 மெ.டன் பொட்டாஷ் உரம் ஐபிஎல் நிறுவனத்தால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாவட்டங்களுக்கு சரக்கு லாரி வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொட்டாஷ் உரத்தை விரைவாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே அனுப்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு ஆண்டுதோறும் மானிய உரங்களுக்கு அவற்றின் சத்துக்களின் அடிப்படையிலான மானியக் கொள்கையைப் பின்பற்றி மானியம் வழங்குகிறது.
மானியம் விவரம் (Grant details)
யூரியா (45 கிலோ மூட்டை) -ரூ1,125
டிஏபி (50 கிலோ மூட்டை) - ரூ1,211.55
பொட்டாஷ் (50 கிலோ மூட்டை) - ரூ303.50
தூத்துக்குடித் துறைமுகத்தில் வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தின் விற்பனை விலை மூட்டை ஒன்று ரூ1,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் புதியதாக வந்தடைந்துள்ள பொட்டாஷ் உர குவியலுக்கு மட்டுமே பொருந்தும்.
அதே விலை மட்டுமே (Same price only)
எனவேக் கைஇருப்பில் உள்ள 18,600 மெட்ரிக் டன் பொட்டாஷ் உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி ரூ1040 என்கிற விற்பனை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டைகள் ரூ1040க்கு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கண்காணிப்புப் பணிகள் (Monitoring tasks)
இதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்சமயம் மாநிலத்தில் சம்பா பருவத்திற்குத் தேவையான 66,200 மெ.டன் யூரியா, 21,380 மெ.டன் டிஏபி, 16,780 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1,34,140 மெ.டன் காம்பளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன. இவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!
நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!