தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் மற்றும் புதுக்கோட்டையின் சமிதி குடுமியான்மலையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அங்கக வேளாண்மை பயிற்சி தொடங்கியுள்ளது.
6 நாட்கள் பயிற்சி (6 days training)
இந்தப் பயிற்சி இரண்டு குழுக்களாகப் பிரித்து ஆறு நாட்களுக்கு (08 - 13 பிப்ரவரி 2021) நடத்தப்படுகிறது.
சந்தைப்படுத்துதலின் அவசியம் (The need for marketing)
இதில் பங்கேற்ற பயிர் மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர். வெ. கீதாலட்சுமி, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் அங்கக வேளாண்மையின் முக்கிய உத்திகள், விவசாயிகளின் பங்களிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
மண்வளம் (Soil)
இதேபோல் வளங்குன்றா அங்கக வேளாண்மை துறை தலைவர் முனைவர். செ. மாணிக்கம், அங்கக தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளிடம் சென்று சேர்க்க வேண்டியதன் அவசியம், மண்வளம் மற்றும் நச்சு இல்லா உணவு உற்பத்திக்கு வழிவகை செய்தல் குறித்து அறிவுறுத்தினார்.
உழவியல் துறைத்தலைவர் முனைவர். சி. ஆர். சின்னமுத்து, மருந்தில்லா களை மேலாண்மை மற்றும் நானோ தொழில்நுட்ப முறையில் களைகளை கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி எடுத்துரைத்து ஒரு குழுவினருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இப்பயிற்சியில் அங்கக முறையில் சத்து மேலாண்மை, களை மேலாண்மை, மட்கு உரம், மண்புழு உரம் தயாரித்தல், அங்கக முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக சான்றிதழ் மற்றும் பங்கேற்பாளர்கள் உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
தோட்டக்கலை இயக்குநர்கள் (Directors of Horticulture)
இதில் அங்கக வேளாண்மையில் வெற்றி கண்ட விவசாயிகளின் வயல்வெளிப் பார்வையிடுதலும் கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 60 உதவி வேளாண் தோட்டக்கலை இயக்குநர்கள், தோட்டக்கலை அதிகாரிகள் மற்றும் உதவி தோட்டக்கலை அதிகாரிகள் பங்கேற்று பயனடைந்தார்கள்.
மேலும் படிக்க...
மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!