1. தோட்டக்கலை

மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தேனியில் மா மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இனிவரும் காலங்களில் தோன்றும் கற்றாழைப்பூச்சித் தாக்குதலில் இருந்து அவற்றைப் பாதுகாக்க தோட்டக்கலைத்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.


தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேல் மா விவசாயம் நடக்கிறது.

மாம்பழ சாகுபடி (Mango cultivation)

குறிப்பாக அல்போன்சா, செந்தூரம், பங்கனபள்ளி, மல்கோவா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த மரங்களில் தற்போது பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மா மரத்திற்கு பனியுடன்  கூடிய பகல் கடும் வெப்பம் உள்ள சீதோஷ்ண நிலை விவசாயத்திற்கு உகந்ததாகும்.தற்போது இதே போன்ற பருவநிலை நிலவுவதால் மரங்களில் அதிகமாக பூ பூத்துக்குலுங்குகின்றன.அந்த நேரத்தில் புழு, கற்றாழைப்பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும்.

தாக்குதலைத் தவிர்க்க யோசனை (Idea to avoid attack)

  • பூச்சிக் கொல்லியான கியூரா கிரான் 2 மி..லி. யுடன் 1 லிட்டர் தண்ண ர் கலந்து மரத்தில் பூக்கள் விடும் இடத்தில் மெதுவாக தெளிக்க வேண்டும்.

  • பூ கருகினால் கார்பண்டாசைம் 2 கிராமை 1 லிட்டர் நீருடன் கலந்து பூ மீது தெளிக்க வேண்டும்.

இவ்வாறுத் தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

தொடர் மழை எதிரொலி-உப்பு விலை உயரும் அபாயம்!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

English Summary: Aloe vera attacking mango trees - idea to protect!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.