நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை (Instructions) வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
குருத்துப் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவு செய்யும் போது நாற்றில் முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனியை கிள்ளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
-
பாக்டீரியா இலைக் கருகல் நோய் இருப்பது தென்பட்டால் அந்த தருணத்தில் நுனியை கிள்ளுவது நல்ல முறை அல்ல. இதனைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.
-
ஓர் ஏக்கருக்கு 20 - 25 பறவை குடில்கள் அமைக் வேண்டும்.
-
சூரிய வெளிச்சத்தில் இயங்கக்கூடிய தானியங்கி விளக்கு பொறியை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
-
இதேபோல் இனக்கவர்ச்சிப் பொறி வைத்தும், ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
-
இனக்கவர்ச்சிப் பொறிகளின் குப்பிகளை அவ்வப் போது மாற்றி அதன் தாக்குதலை குறைக்கலாம்.
-
டிரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் நடவு நட்ட 30 மற்றும் 37வது நாள் (Day) வெளியிட வேண்டும்.
-
பொருளாதார சேத நிலையை தாண்டும் பட்சத்தில், ஒரு ஹெக்டேருக்கு கார்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 % எஸ்.பி 1000 கிராம் அல்லது ஃப்ளூபெண்டியாமைடு 39.35% எஸ்.சி. 50 கிராம் அல்லது குளோர்பைரிபோஸ் 20% இ சி 1250 மில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகிக்கலாம்
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய அழைப்பு- விவசாயிகள் கவனத்திற்கு!