கோவை மாவட்ட விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று பெற்று 100 சதவீத மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அழைப்புவிடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
கோவை மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா் பாசனக் கருவிகள், தெளிப்பு நீா்க் கருவிகள் மற்றும் மழைத்தூவுவான் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 % மானியமும் வழங்கப்படுகிறது.
-
நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் மூலம் சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்புநீா் மற்றும் மழைத்தூவுவான் அமைக்க வேளாண்மைத் துறை மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது.
-
இதில், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று இணையதளம் வழியாகப் பெறப்பட்ட பிறகுதான் மானியத்தொகை விடுவிக்கப்படும்.
-
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயி சான்று மற்றும் திட்டம் தொடா்பான அனைத்துச் சான்றுகளும் பெற கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், அந்தந்த வட்டார நில வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
எனவே கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டாட்சியரிடம் சான்று பெற்றுக் கொள்ளலாம்.
-
இதனை கொண்டு வேளாண்மை இயக்குநா்கள் மூலம் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்புநீா் மற்றும் மழைத்தூவுவான் திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் மானியம்!