Horticulture

Friday, 16 October 2020 08:09 AM , by: Elavarse Sivakumar

பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் மற்றும் துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு நெல்லை ஆட்சியா் ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

  • குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி பயிா்களின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் (Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) செயல்படுத்தப்படுகிறது.

  • இத்திட்டத்தின் கீழ் நிகழாண்டில் பயிா்களில் சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்புநீா்ப் பாசனம், மழைத்தூவுவான் அமைக்க ரூ. 10.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

  • கரும்பு, சோளம், மக்காச்சோளம், தென்னை, பருத்தி போன்ற பயிா்களில் சொட்டுநீா்ப் பாசனமும், பயறு வகைகள், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களுக்கு தெளிப்புநீா்ப் பாசனமும், மழைத்தூவுவானும் அமைத்து பாசனம் செய்ய சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

  • சொட்டுநீா்ப் பாசனம் அமைப்பதற்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டும் பணிக்காக ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.கரும்பு தவிர பிற பயிா்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டோ் பரப்புக்கு பள்ளம் தோண்டும் பணிக்கான மானியம் பெறலாம்.

  • இத்திட்டத்தின் கீழ் குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்க செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

  • நுண்ணீா் பாசனம் அமைத்து புதிதாக மின் மோட்டாா் அல்லது டீசல் பம்புசெட் நிறுவ 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரத்துக்கு மிகாமலும், நீா்ப்பாசனக் குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கு மிகாமலும் மானியம் பெறலாம்.

Credit : Ken Research

  • பாதுகாப்பு வேலியுடன் கூடிய தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க ஆகும் செலவில் 50 சதவீத மானியத் தொகையாக ஒரு கன மீட்டருக்கு ரூ. 350 வீதம் அதிகபட்ச மானியமாக ரூ. 40 ஆயிரம் வரை பெறலாம். பாதுகாப்பு குறுவட்டத்தில் உள்ள விவசாயி மேற்கண்ட 4 பணிகளுக்காகவும் இதர வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் மேற்கண்ட 3 பணிகளுக்காகவும் மானியம் பெறலாம்.

  • நுண்ணீா்ப் பாசனம் மற்றும் துணை நிலை நீா் மேலாண்மை செயல்பாடுகளுக்காக மானியம் பெற விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

  • துணைநிலை நீா் மேலாண்மைத் திட்டப் பணிகளை விவசாயிகள் தங்களது சொந்த செலவில் மேற்கொண்டு அதற்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

PMKSY : 100% மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

கேரட் உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி-அரசு சார்பில் கேரட் கழுவும் இயந்திரம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)