நிலக்கடலைப் பயிரில் தற்பொழுது ஏற்பட்டுள்ள புரோடினியா புழுவின் தாக்குதலில் இருந்துப் பயிர்களைப் பாதுகாக்கும் சிறந்த வழிகள் குறித்து வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
புரோடினியா புழுக்கள் தாக்குதல் (Proteinia worm attack)
புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ச்சிப் பருவத்திலுள்ள நிலக்கடலைப் பயிரில் தற்பொழுது புரோடினியா புழுவின் தாக்குதல் தென்படுகிறது.
சுரண்டித் தின்னும் (Exploitative)
புரோடினியா புழுக்கள் நீளமாக, பருத்து, உடம்பில் பழுப்பு நிறத்திலான புள்ளிகளுடன் காணப்படும். தொடக்க நிலையில் புழுக்கள் கூட்டமாக இலைகளைச் சுரண்டித் தின்னும்.
மண்ணுள் வாழும் (Living in the soil)
இப்புழுவின் தாக்குதல் அதிகமாகும்போது இலைகளில் நரம்பு மட்டுமே இருக்கும். வளர்ந்த புழுக்கள் பகலில் செடிகளின் அருகே மண்ணுள் வாழும். இரவில் வெளியில் வந்து இலைகளை உட்கொண்டு சேதம் விளைவிக்கும்
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (Integrated crop protection)
புரோடினியா புழுவின் தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினைக் கடைப்பிடித்து கட்டுப்படுத்துவது எளிது.
கோடை உழவு (Summer plowing)
நிலக்கடலையைப் பயிரிடுவதற்கு முன்னதாகக் கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூண்டுப்புழுக்களை அழிக்கலாம்.
ஆமணக்குச் செடியினை வயலின் ஓரத்தில் வளர்த்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து விளக்குப் பொறிகள் வைத்துத் தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.
இனக்கவர்ச்சிப் பொறிகள் (Racial traps)
ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
பறவை இருக்கைகள் (Bird seats)
-
முட்டைக் குவியல்களையும் இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம். ஏக்கர் ஒன்றுக்கு 10 இடங்களில் பறவை இருக்கைகள் அமைக்கலாம்.
-
என்.பி.வி. வைரஸ் என்ற நச்சுயிரி (ஸ்போடாப் டிரார்) ஒரு ஏக்கருக்கு 100 புழுக்கள் சமன் எனும் அளவில் ஒட்டும் திரவம் கொண்டு மாலைவேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பொருளாதாரச் சேதநிலை (Economic damage)
மேலும், நூறு மீட்டர் பாத்தியில் எட்டு முட்டைக் குவியல்கள் அல்லது செடிக்கு இரண்டு புழுக்கள் இருந்தால் இப்புழுவின் தாக்குதல் பொருளாதாரச் சேதநிலையை எட்டிவிட்டது என அறியலாம்.
மருந்துகள் (Drugs)
எனவேத் தாக்குதல் பொருளாதாரச் சேதநிலைக்குமேல் தென்பட்டால், இளம்புழுக்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஸ்பினோசாடு 45 எஸ்.சி. 80 மி.லி., புரோபினோபாஸ் 50 இ.சி. 500 மி.லி., மோனோகுரோட்டபாஸ் 36 எஸ்.எல். 600 மி.லி. இமாமெக்டின் பென்சோயேட் 100 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிமருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்
ஏக்கர் ஒன்றுக்கு அரிசித் தவிடு ஐந்து கிலோ, வெல்லம் அரை கிலோ, தையோடிகார்ப் 200 கிராம் ஆகியவற்றுடன் 3 லிட்டர் நீர் சேர்த்தக் கலவையை நச்சுக் கவர்ச்சி உணவு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். இவற்றை மாலைவேளையில் வயலிலும் வரப்பிலும் வைத்து வளர்ந்தப் புழுக்களைக் கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
இதுத் தவிர, ஏக்கர் ஒன்றுக்கு 200 கிராம் தையோடிகார்ப் 75டபிள்யு.பி. அல்லது 200 மி.லி. நோவலூரான் 10 இ.சி, இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்தும் வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
தகவல்
இராம.சிவக்குமார்
வேளாண்மை இணை இயக்குநர்
புதுக்கோட்டை
மேலும் படிக்க....